"விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும்" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

First Published May 9, 2017, 11:27 AM IST
Highlights
vijay mallya should appear in court


இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து சுமார் 9,000 கோடிக்கு மேல் கடனை வாங்கிக்கொண்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு.

இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீது இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில், விஜய் மல்லையாவைக் கைதுசெய்வது தொடர்பாக இங்கிலாந்திடம் உதவி கோரியிருந்தது இந்திய அரசு. கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, இவ்வளவு முறைநீதிமன்றத்தில் ஆஜராக நேரம் கொடுத்தான் இதுவரை அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை, நீதிமன்றத்தில் ஆஜாராகத்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா ஜுலை 10ம் தேதி ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளில் வாங்கிய கடனுக்காக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

click me!