அசிங்கமான நிலையில் அயோத்தி ரயில் நிலையம்! துப்புரவு ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்!

By SG Balan  |  First Published Mar 24, 2024, 3:29 AM IST

ட்விட்டரில் வைரலான இந்தப் பதிவுக்கு லக்னோ ரயில்வேயின்  அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அயோத்தி தாம் ரயில் நிலையத்தின் துப்புரவு ஒப்பந்தக்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அயோத்தி நகரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அயோத்தி தாம் ரயில் நிலையத்தை சுத்தமாகப் பராமரிக்காத துப்பரவு ஒப்பந்ததாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரியாலிட்டி பில்லர் (@reality5473) என்ற ட்விட்டர் பயனர் அயோத்தி ரயில் நிலையத்தில் நிலவும் அசுத்தமான நிலையைக் காட்டும் மூன்று வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். Gems of Engineering என்ற பக்கத்தில் ஶ்ரீநகர் ஜீலம் ஆற்றங்கரையோர படங்களைப் பகிர்ந்துள்ள பதிவுக்கு பதிலாக தனது வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

Latest Videos

undefined

ட்விட்டரில் வைரலான வீடியோக்களில் ரயில் நிலையத்திற்கு வெளியே பலர் தூங்கிக்கொண்டிருப்பதைப் பாரக்க முடிகிறது. கண்ட இடத்தில் குப்பைகளை வீசுவதையும் காணமுடிகிறது. ரயில் நிலையம் செல்லும் வழியிலும் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

சொந்த வீடு வாங்க வெறும் 84 ரூபாய் இருந்தா போதும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு!

Bro post this video
The condition of the newly built ayodhya station after just 2 months of opening

PART 1 pic.twitter.com/Sz4LgTOcFs

— reality piller (@reality5473)

மற்றொரு வீடியோவில் ரயில் நிலையத்திற்குள் எங்கெல்லாம் குப்பைகள் வீசப்பட்டு சுத்தம் செய்யப்படாமல் கிடக்கின்றன என்று காட்டப்படுகிறது. ரயில் நிலைய நடைபாதை தரையில் பீடா எச்சிலை துப்பியிருப்பதையும் காண முடிகிறது. ரயில் நிலையத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பகுதியையும் இன்னொரு வீடியோவில் காணலாம்.

ட்விட்டரில் வைரலான இந்தப் பதிவுக்கு லக்னோ ரயில்வேயின்  அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அயோத்தி தாம் ரயில் நிலையத்தின் துப்புரவு ஒப்பந்தக்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இன்று, அயோத்தி தாம் நிலையத்தில் துப்புரவு ஒப்பந்ததாருக்கு ரூ .50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்போது ரயில் நிலையம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்ட சில படங்களும் இங்கே பகிரப்படுகின்றன" என்று லக்னோ ரயில்வேயின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அயோத்தி ரயில் நிலையத்தைப் பற்றி பலரும் ட்விட்டரில் தங்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர். பல பயனர்கள் ரயில் நிலையத்தின் நிலையை வீடியோ எடுத்து வெளியிட்டவரைப் பாராட்டுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுத்தம் செய்ததுடன், ஒப்பந்ததாருக்கு அபராதமும் விதித்த ரயில்வே நிர்வாகத்தையும் பாராட்டியுள்ளனர்.

ஏசி ஓடிக்கிட்டே இருந்தாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? இந்த ஐடியாவை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

click me!