Actor Mithun Chakraborthy : சுமார் 48 ஆண்டுகளாக இந்திய திரையுலகில் மிகப்பெரிய நடிகராக உள்ள மிதுன் சக்ரவர்த்தி அவர்கள் இப்பொது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1976 ஆம் ஆண்டு வங்காள மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர்தான் மிதுன் சக்கரவர்த்தி. தற்போது வரை ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் இவர் சுமார் 48 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 1980 களின் முற்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக விளங்கி வந்தவர் தான் மிதுன்.
தமிழிலும் குரு மற்றும் யாகவராயினும் நாகாக்க ஆகிய இரு படங்களில் முக்கிய வேடம் ஏற்று இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அவர்கள் பெங்காலி, ஒடியா, போஜ்புரி, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.
3 படம் பிளாப் ஆனதற்கு அனிருத்தின் பாட்டு தான் காரணமா? புது குண்டை தூக்கிப்போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சினிமா உலகில் கொடி கட்டி பறந்த இவர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எம்.பி ஆகவும் பதிவு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கிய பிரமுகர்களில் மிதுன் சக்கரவர்த்தி அவர்களும் ஒருவர், அந்த சம்பவத்தை தொடர்ந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்த மிதுன், கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
தற்போது 73 வயதாகும் மிதுன் சக்கரவர்த்தி அவர்கள் அண்மையில் நடைபெற்ற டான்ஸ் பங்களா டான்ஸ் என்கின்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இன்று காலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.