Miss World 2024 : விரைவில் ஒரு சர்வதேச கொண்டாட்டத்திற்கு இந்தியா தயாராகவுள்ளது. சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, மீண்டும் உலக அழகிப்போட்டி டெல்லியில் இம்மாதம் தொடங்குகிறது.
71வது உலக அழகி போட்டி இந்தியாவில் பிப்ரவரி 18 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் இன்று பிப்ரவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, மதிப்புமிக்க இந்த உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற பிப்ரவரி 20 ஆம் தேதி புதுதில்லியில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (ஐடிடிசி) "தி ஓபனிங் செரிமனி", "இந்தியா வெல்கஸ் தி வேர்ல்ட் காலா" உடன் இந்த போட்டி தொடங்கும். இது மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மார்ச் 9 ஆம் தேதி கிராண்ட் பைனலுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"நான் தான் மிகப் பெரிய மீன்!" சேற்றில் சிக்கியபடி காமெடி செய்த நாகாலாந்து பாஜக அமைச்சர்!
இந்த உலக அழகி போட்டிகள் உலகளவில் ஒளிபரப்பப்படும். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்போட்டி நடைபெறவுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பல்வேறு போட்டிகள் மற்றும் தொண்டு நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் என்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு உலக அழகி போலந்தின் கரோலினா பிலாவ்ஸ்கா, முன்னாள் வெற்றியாளர்களான டோனி ஆன் சிங் (ஜமைக்கா), வனேசா போன்ஸ் டி லியோன் (மெக்சிகோ), மனுஷி சில்லர் (இந்தியா) மற்றும் ஸ்டெபானி டெல் வாலே (புவேர்ட்டோ ரிக்கோ) ஆகியோருடன் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உலக அழகி போட்டி அமைப்பின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி கூறியதாவது.. “எனக்கு இந்தியா மீது மிகுந்த அன்பு உள்ளது. அப்படிப்பட்ட நாட்டில் 71வது உலக அழகி விழா நடைபெறுவதை நான் விரும்புகிறேன். இந்தப் போட்டிகளை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வர ஜமீல் சைடி கடுமையாக உழைத்தார். அவர்களுக்கு நன்றி.
"மிஸ் வேர்ல்ட் போட்டியின் 71வது பதிப்பிற்கு நாங்கள் சிறந்த அணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார். இந்தியா கடைசியாக 1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியை நடத்தியது. 2017 ஆம் ஆண்டு பட்டம் வென்ற சில்லர், சமீபத்தில் பட்டம் வென்ற இந்தியர் ஆவார். முன்னதாக, ரீட்டா ஃபரியா பவல், ஐஸ்வர்யா ராய், டயானா ஹைடன், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி, மதிப்புமிக்க ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மோடிக்குப் பிறகு பிரதமராக தகுதியானவர் யார்? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?