Bengaluru Public Holidays 2024 : இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் கூடுதல் விடுமுறைகளுடன் சேர்த்து 25 பொது விடுமுறை நாட்களின் பட்டியலை பெங்களூரு மாநில அரசு அறிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இவற்றில் ஒன்பது விடுமுறைகள் திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளுடன் ஒத்துப்போவதால், 2024 முழுவதும் வார இறுதி நாட்களை மக்கள் இன்புற்று மகிழும் வாய்ப்பை அவர்களுக்கு அளித்துள்ளது என்றே கூறலாம். ஆகவே இந்த செய்தி பள்ளி குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை பலரையும் சந்தோஷப்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் ஆண்டு ஜனவரி 15, 2024 அன்று உகாதி பண்டிகை வருகின்றது. மேலும் செப்டம்பர் 16 அன்று ஈத் மிலாத் மற்றும் நவம்பர் 18 அன்று கனகதாச ஜெயந்தி போன்ற விடுமுறைகளால் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இவை அனைத்தும் திங்கட்கிழமைகளுடன் ஒத்துப்போகின்றன என்பது தான் உச்சகட்ட மகிழ்ச்சியை மக்களுக்கு அளித்துள்ளது.
அதே போல வெள்ளிக்கிழமைகளில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம், மார்ச் 8-ம் தேதி சிவராத்திரி, மார்ச் 29-ம் தேதி புனித வெள்ளி, மே 10-ம் தேதி அக்ஷய திரிதியை, அக்டோபர் 11-ம் தேதி ஆயுதபூஜை மற்றும் கன்னட ராஜ்யோத்சவா நவம்பர் 1 ஆகிய நாட்களில் கொண்டாடப்படும். இதுவும் மக்களுக்கு பேரானந்தமாக அமைத்துள்ளது.
மேலும் ஏப்ரல் 21 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமி இரண்டாவது சனிக்கிழமைகளில் வருகிறது, அதே போல ஏப்ரல் 14 ஆம் தேதி வரும் அம்பேத்கர் ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமையுடன் ஒத்துப்போகிறது. மேலும், குடகு மாவட்டத்தில் செப்டம்பர் 3-ம் தேதி கைல் முஹூர்த்தம், அக்டோபர் 17-ம் தேதி துலா சங்கரமணம் மற்றும் டிசம்பர் 14-ம் தேதி ஹுத்தாரி ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.