Rajasthan Elections : ராஜஸ்தானின் 200 தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகங்காநகரின் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான குர்மீத் சிங் கூனார் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் 100 இடங்களை வென்றதன் மூலம் பெரும்பான்மைக்கு ஒரு சிறிய குறைவைக் கண்டது, மேலும் பாஜக 73 இடங்களை வென்றது. ஆனால் கடந்த 2013ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் எண்ணிக்கை 163 என்ற அறுதிப் பெரும்பான்மையிலிருந்து சரிந்துள்ளது என்றே கூறலாம்.
தபோது ராஜஸ்தானில் நடக்கும் இந்த தேர்தலில் 1,862 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் மற்றும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 5.25 கோடியாகும். இவர்களில் 1.71 கோடி வாக்காளர்கள் 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள், 22.61 லட்சம் பேர் 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள வாக்காளர்கள் கடந்த 1993க்குப் பிறகு எந்த அரசாங்கத்தையும் இரண்டாவது முறையாக ஆட்சி செய்ய அனுமதி வழங்கவில்லை என்றே கூறலாம். இந்த சுழலும், பிரதமர் மோடியின் பிரபலமும் மீண்டும் அங்கு பாஜகவிற்கான ஆதரவை அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் பாஜகவின் மிகவும் பிரபலமான தலைவர் என்று கூறப்படும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஊழல் போன்ற விவகாரங்களில் காங்கிரஸை, பாஜக தாக்கி வருகிறது. திரு. கெலாட்டுக்கு எதிராக பாஜக பயன்படுத்திய முக்கிய ஆயுதங்களில் அதுவும் ஒன்று. முதல்வர் செய்த முறைகேடுகளை விவரிக்கும் 'ரெட் டைரி' மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் ராஜேந்திர குதாவால் சட்டசபையில் அலைக்கழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சச்சின் பைலட் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார், இது அசோக் கெலாட்டால் பகிரப்பட்டது, இது காங்கிரஸுக்குள் ஒற்றுமையின் அடையாளமாகக் காணப்பட்டது. திரு. கெஹ்லாட் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் திரு. பைலட்டை ஒரு இளம் தலைவர் என்று அழைத்தார்.
ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் அமைதியான முறையில் வாக்களிப்பதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறும்.