உத்தரகாண்ட் சுரங்க விபத்து: இன்று இரவுக்குள் தொழிலாளர்கள் மீட்பு - நம்பிக்கையில் மீட்பு குழுவினர்!

By Manikanda Prabu  |  First Published Nov 24, 2023, 8:14 PM IST

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்று இரவுக்குள் மீட்கப்படுவார்கள் என்று மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்


சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 41 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, ஆக்சிஜன், தண்ணீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Latest Videos

undefined

அதேசமயம், சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியானது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உத்தரகாண்ட் சுரங்கத்தினுள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்க 15 மணி நேரமாகும் என நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்புளுயன்சா தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

ஆனால், சுரங்க இடிபாடுகளுக்கு இடையே துளையிட்டு வந்த ஆகர் இயந்திரம் பொறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் தளம் திடீரென உடைந்தது. இதனால், பணி நிறுத்தப்பட்டது.

சில்க்கியாரா சுரங்கத்திற்குள் சிக்கி உள்ளவர்களை துளையிட்டு மீட்பு முயற்சியில் முக்கியமாக செயல்பட்டு வந்த ஆகர் இயந்திரம் கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து செயல்படாமல் இருந்தது. இன்று காலை 11 மணிக்கு மீண்டும் செயல்பட தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில், மீண்டும் தாமதமானது.

இந்த நிலையில், ஆகர் இயந்திரம் கடந்த ஒரு மணி நேரத்துக்கு முன்பு மீன்டும் செயல்படத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்று இரவுக்குள் மீட்கப்படுவார்கள் என்று மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

click me!