ஐஐடி கேண்டீனில் அசைவத்துக்கு அனுமதி மறுப்பு... சர்ச்சையைக் கிளப்பிய நோட்டீஸ்!

By SG Balan  |  First Published Jul 31, 2023, 12:48 AM IST

மும்பை ஐஐடி நிறுவனத்தில் நடத்திய விசாரணையில் இது தனிநபர்கள் யாரோ செய்த செயல் என்றும் மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மும்பை ஐஐடியில் உள்ள கேண்டீனில் உணவுப் பாகுபாடு குறித்த பிரச்சினையை மாணவர்கள் எழுப்பியுள்ளனர். அங்கு உள்ள கேண்டீன் சுவர்களில் சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டும் அனுமதி என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது என மாணவர் கள் ஞாயிற்றுக்கிழமை புகார் கூறியுள்ளனர்.

விடுதி கேண்டீனின் சுவர்களில் "சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்கார அனுமதிக்கப்படுவார்கள்" என்ற நோட்டீஸ்கள் கேண்டீனில் ஒட்டப்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதுபற்றி விசாரித்தபோது, இத்தகைய நோட்டீஸை கேண்டீனில் வைத்தது யார் என்று தங்களுக்குத் தெரியாது என்று ஐஐடியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் (APPSC) என்ற மாணவர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அந்த நோட்டீஸ்களைக் கிழித்துள்ளனர்.

2 வருஷமா சம்பளம் வாங்காமல் உழைக்கும் அம்பானி! ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருக்கு வந்த சோதனை!

Even though RTIs and mails for hostel GSec shows that there is no institute policy for food segregation, some individuals have taken it upon themselves to designate certain mess areas as "Vegetarians Only" and forcing other students to leave that area. pic.twitter.com/uFlB4FnHqi

— APPSC IIT Bombay (@AppscIITb)

மும்பை ஐஐடி நிறுவனத்தில் நடத்திய விசாரணையில் அங்கு உணவுப் பாகுபாடு எதுவும் இல்லை என்றும் சில தனிநபர்கள் ‘சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டும்’ என்று குறிப்பிட்டு மற்ற மாணவர்களை அந்தப் பகுதியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

"இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தப் பகுதியில் இருந்தும் மற்றொரு மாணவரை வெளியேற்ற எந்த மாணவருக்கும் உரிமை இல்லை. இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விடுதி உணவகத்தின் பொதுச் செயலாளர் தரப்பில் மாணவர்கள் மற்றும் விடுதிப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்னஞ்சலும் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன் 2018ஆம் ஆண்டு, மும்பை ஐஐடியில் உள்ள விடுதி மெஸ்ஸில் அசைவம் சாப்பிடுபவர்கள் தனித்தனி தட்டுகளைப் பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு ஈமெயில் அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவூட்டத்தக்கது.

தண்ணீர் கேட்ட மாற்றுத் திறனாளியை தாக்கிய ஜவான்கள்! வைரலாகும் உ.பி.யில் நடந்த கொடுமை!

click me!