Vava Suresh : எமனையே எட்டி பார்த்து வந்த வாவா சுரேஷ்... மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை..!

Published : Feb 04, 2022, 10:58 AM ISTUpdated : Feb 04, 2022, 11:28 AM IST
Vava Suresh : எமனையே எட்டி பார்த்து வந்த  வாவா சுரேஷ்... மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை..!

சுருக்கம்

கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ். இதுவரை 50,000-க்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள இவர், ராஜ நாகங்களை பிடிப்பதில் வல்லவர்.

கேரளாவில் நாகப்பாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்ற வாவா சுரேஷ் பேச தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ். இதுவரை 50,000-க்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள இவர், ராஜ நாகங்களை பிடிப்பதில் வல்லவர். செங்கனாச்சேரி அருகே குறிச்சி எனும் பகுதியில் ஜனவரி 31ம் தேதி வீட்டில் நாகப்பாம்பு புகுந்ததாக வாவா சுரேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவகமாக பிடித்த அவர் அதனை சாக்குப் பைக்குள் நுழைக்க முயன்றார். 

அப்போது, எதிர்பாராத விதமாக சுரேஷின் வலது தொடையில் கடித்தது. சில மணிநேரங்களில் அங்கேயே மயக்கமான நிலைக்கு சென்றார். உடனே அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர்  கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்தனர். முதலில் அவரது உடல்நிலை அபாயக்கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், வாவா சுரேஷ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாவா சுரேஷ் வென்டிலேட்டர் உதவி இல்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைக்கும் நிலையில் வாவா சுரேஷ்  மருத்துவர்கள், செவிலியர்களிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் எந்த நேரத்திலும் எந்தச் சூழலிலும் அழைத்தாலும் பாம்புகளைப் பிடிக்கும் வாவா சுரேஷ்க்கு பாம்பு கடித்துவிட்டது என தெரிந்ததும் பலரும் அவர் குணமடைய பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!