ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பு திருப்திகரமாக உள்ளது… அலோக் குமார் கருத்து!!

By Narendran SFirst Published Sep 12, 2022, 7:32 PM IST
Highlights

ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்திகரமாக உள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார். 

ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்திகரமாக உள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடா்பான தீா்ப்பை மாவட்ட நீதிமன்றம் இன்று பிறப்பித்தது. இதனை முன்னிட்டு வாராணசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிர காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். மசூதிக்குள் ஆய்வு நடத்தி விடியோ பதிவு செய்ய நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. அப்போது மசூதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீா் தேக்கும் தொட்டியில் சிவலிங்கம் இருப்பதாக அந்தக் குழு தெரிவித்ததால் பெரும் சா்ச்சை எழுந்தது.

இதையும் படிங்க: உலகின் தலைசிறந்த நிறுவனங்களை இந்தியர்கள் தான் இயக்குகிறார்கள்… நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!

இந்த வழக்கை எதிா்த்து முஸ்லிம் தரப்பினா் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மாவட்ட நீதிமன்றம் முதலில் விசாரணை நடத்தி வந்தது. இதில் இரு தரப்பினரின் வாதம் முடிவடைந்ததையடுத்து செப்டம்பா் 12 ஆம் தேதி வரை தீா்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. அதன்படி இன்று வழக்கில் தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க: எங்கள் வீட்டில் சாப்பிட வாருங்கள் என அழைத்த ஆட்டோ ஓட்டுநர்; உடனே ஒப்புக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!!

இந்த நிலையில் ஞானவாபி கோவில் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்திகரமாக உள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் மூலம் வாரணாசி வழக்குக்கு தடை விதிக்கப்படவில்லை என்று வாரணாசி நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்துள்ளது. மற்ற தரப்பினரின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. முதல் தடை கடந்துவிட்டது. இப்போது நீதிமன்றம் இந்த விஷயத்தை அதன் சொந்த தகுதியில் ஆராயும். சட்டம், நீதி வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு மத மற்றும் ஆன்மீக விஷயம் என்று நான் கூற விரும்புகிறேன். எனவே, இந்த முடிவை கருணையுடனும், நிதானத்துடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி, தோல்வி என்ற சொற்களில் விளக்கம் அளிக்கக் கூடாது என்று தெரிவித்தார். 

click me!