india @75: கலாமண்டலத்தில் விமரிசையாக நடைபெற்ற வஜ்ர ஜெயந்தி

Published : Jun 21, 2022, 11:10 PM IST
india @75: கலாமண்டலத்தில் விமரிசையாக நடைபெற்ற வஜ்ர ஜெயந்தி

சுருக்கம்

ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கேரளாவை அடுத்த கலாமண்டலத்தில் கேரளா கலை வடிவங்களை அனுபவிக்கும் வாய்ப்பை பெற்றனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்.சி.சி. இணைந்து வஜ்ர ஜெயந்தி யாத்திரையை நடத்தி வருகின்றன. நாட்டின் சுதந்திர போராட்ட நினைவுச் சின்னங்கள், ராணுவ தளங்கள், விவசாயம், கலாச்சாரம் மற்றும் ஆறிவியல் ஆராய்ச்சி மையங்களை ஆய்வு செய்யும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் படி ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கேரளாவை அடுத்த கலாமண்டலத்தில் கேரளா கலை வடிவங்களை அனுபவிக்கும் வாய்ப்பை பெற்றனர். என்.சி.சி. மாணவர்கள் வல்லத்தோள் நினைவகம், மற்றும் நிலா வளாகத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களுக்கு சென்றனர். இங்கு அவர்களுக்கு சிறப்பு நடன பயிற்சி வழங்கப்பட்டது.

யாத்திரை சென்றவர்களுக்கு கலாமண்டலத்தின் பதிவாளர் வரவேற்றார். அதன் பின் அவர்கள் அனைவரும் கேரளாவின் கலாச்சாரம், வல்லத்தோள் நாராயண மேனன் நினைவகத்திற்கு சென்றனர். இங்கு கலாமண்டலத்தின் இலக்கிய குறிப்புகள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன.

என்.சி.சி. கேரளா கூடுதல் இயக்குனர் மேஜர் அலோக் பெரியும் கலந்து கொண்டார். கதக்களி ஜாம்பவான எம்.பி.எஸ். நம்பூத்ரி என்.சி.சி. மாணவர்களுக்கு கலாமண்டலம் மற்றும் அதன் நிறுவனர் மற்றும் தேசியவாதியான வல்லத்தோள் பற்றி விளக்கவுரை அளித்தார். 

கலாமண்டலத்தின் பல்வேறு வளாகங்களுக்கு என்.சி.சி. மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். கலாமண்டலத்தின் கலைஞர்கள் கதக்களி, மோகினி ஆட்டம், பரத நாட்டியம் மற்றும் குச்சிப்புடி போன்ற நாட்டியங்களை மாணவர்களுக்கு செய்து காட்டினர். 

PREV
click me!

Recommended Stories

மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை