நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை போக்குவரத்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தப்பிக்க வதோதரா போக்குவரத்துக் காவல் துறை போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை போக்குவரத்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள ஏசி ஹெல்மெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீப்பொறி பறக்க பைக்கை இழுத்துச் சென்ற ஓட்டுநர்! உயிர் தப்பிய வாலிபர்! லாரியில் தொங்கியவாறு வாக்குவாதம்.!
குஜராத் மாநிலம் வதோதராவில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை அணிவதன் மூலம் அவர்கள் அதிகப்படியான வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த ஹெல்மெட்டை அணிந்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேட்டரில் இயங்கக்கூடிய இந்த ஹெல்மெட்டை உருவாக்கி கொடுத்தது அங்குள்ள ஐஐஎம் மாணவர்கள். இந்த ஹெல்மெட்டின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்படுத்தலாம். முதற்கட்டமாக 450 போக்குவரத்து போலீசாருக்கு இந்த ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குஜராத் எக்ஸ்பிரஸ் சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் பலி