Ram Navami : முர்ஷிதாபாத் பகுதியில் நேற்று கோலாகலமாக நடந்த ராம நவமி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு பெண்மணி காயமடைந்துள்ளார்.
நேற்று ஏப்ரல் 17ம் தேதி புதன்கிழமை மேற்கு வங்கம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ராமநவமி கொண்டாடப்பட்டது. இந்த சூழலில் தான் முர்ஷிதாபாத் அருவி நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து TMC மற்றும் BJP ஆகிய இரு கட்சி தலைவர்களும் இந்த திருவிழாக்களில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முர்ஷிதாபாத்தில் உள்ள சக்திபுரா பகுதிக்கு ராமநவமி ஊர்வலம் வந்தபோது தான் குண்டுவெடிப்பு நடந்தது என்றும் அதில் ஒரு பெண் காயமடைந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வெடிப்பில் காயம் அடைந்த அந்த பெண்மணி தற்பொழுது முசிதாபாத் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
undefined
குஜராத் எக்ஸ்பிரஸ் சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் பலி
அதே நேரத்தில் இது குண்டு வெடிப்பா? அல்லது வேறு ஏதேனும் வெடிப்பு அந்த பகுதியில் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள ரெஜிநகர் பகுதியில் ராமநவமி ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்பகுதி போலீசார் தான் இதை திறன் பட செயல்படுத்தி இருக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஜெகநாத் சட்டோபாத்யாய் கூறினார். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் இதுவரை எந்தவிதமான தகவலையும் அளிக்கவில்லை.
ராம் நவமி ஊர்வலத்தை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சுமார் 500க்கும் மேற்பட்ட நிகழ்சிகளை அந்த பகுதியில் ஏற்பாடு செய்து இருந்தனர் என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்ற தகவலை போலீசார் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
தேர்தல் நாளில் விடுமுறை மறுப்பு! பிளிப்கார்ட், பிக் பாஸ்கெட் நிறுவனங்கள் மீது புகார்!