ஃபிளிப்கார்ட் மற்றும் பிக் பாஸ்கெட் போன்ற ஆன்லைன் டெலிவரி தளங்கள் ஏப்ரல் 19ஆம் தேதி டெலிவரி ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் டாடா குழும நிறுவனமான பிக் பாஸ்கெட் (Big Basket) ஆகியவை மீது ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாளில் டெலிவரி ஏஜெண்ட்களுக்கு விடுமுறை அளிக்க மறுப்பதால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பி.கோத்தி நிர்மலாசாமியிடம் புதன்கிழமை இந்த நிறுவனங்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே. நரசிம்மன் இந்த மனுவை அளித்துள்ளார்.
தேர்தல் நாளான ஏப்ரல் 19-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், பிளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவை விடுமுறை கொடுக்க மறுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
குஜராத் எக்ஸ்பிரஸ் சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் பலி
தேர்தல் செயல்முறையை எளிதாக்கும் வகையிலும் பொதுமக்கள் தவறாமல் வாக்குப்பதிவு செய்ய வசதியாகவும் ஏப்ரல் 19ஆம் தேதி அதிகாரப்பூர்வமான பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக செயல்பாட்டில் அனைத்து மக்களும் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது.
இந்நிலையில், "ஃபிளிப்கார்ட் மற்றும் பிக் பாஸ்கெட் போன்ற ஆன்லைன் டெலிவரி தளங்கள் ஏப்ரல் 19ஆம் தேதி டெலிவரி ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பு எங்கள் கவனத்திற்கு வந்தது. இது டெலிவரி ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்த கவலைகளை எழுப்புகிறது" என்று நரசிம்மன் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்புகொண்டு இதுபற்றிக் கேட்டபோது, தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
"தகுதியுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குகிறோம். மேலும் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். ஊழியர்களை வாக்களிக்க ஊக்குவிக்கிறோம்" என்று பிளிப்கார்ட் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.
மீண்டும் தெற்கு ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு!