வதோதராவில் இருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற கார், எக்ஸ்பிரஸ்வேயில் லாரியின் பின்புறம் மோதியது என்று நாடியாட் கிராமப்புற காவல் நிலைய ஆய்வாளர் கிரித் சவுத்ரி தெரிவிக்கிறார்.
குஜராத்தின் கெடா மாவட்டத்தின் நாடியாட் நகருக்கு அருகே அகமதாபாத் - வதோதரா விரைவு சாலையில் புதன்கிழமை கார் ஒன்று லாரி மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் வேகமாக வந்து நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வதோதராவில் இருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற கார், எக்ஸ்பிரஸ்வேயில் லாரியின் பின்புறம் மோதியது என்று நாடியாட் கிராமப்புற காவல் நிலைய ஆய்வாளர் கிரித் சவுத்ரி தெரிவிக்கிறார்.
தேர்தல் நாளில் விடுமுறை மறுப்பு! பிளிப்கார்ட், பிக் பாஸ்கெட் நிறுவனங்கள் மீது புகார்!
"எட்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த இரண்டு பேர், ஆம்புலன்ஸில் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்" என்றும் அவர் கூறுகிறார்.
நாடியாட் எம்.எல்.ஏ.வான பங்கஜ் தேசாய் கூறுகையில், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாரி எக்ஸ்பிரஸ்வேயின் இடதுபுறப் பாதையில் நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது என்கிறார். அதிவேகமாக காரை ஓட்டிவந்தவர் பிரேக் போடுவதற்குள் லாரி மீது மோதியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இறந்தவர்களின் உடலை ஒப்படைக்க அவர்களின் உறவினர்களைத் தொடர்பு கொள்ள காவல்துறை முயற்சி செய்து வருகிறது.