தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது லாரி மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியது மட்டுமல்லாமல் சட்டென லாரியின் படிக்கட்டு பகுதியில் தொற்றிக்கொண்டார்.
ஐதராபாத்தில் பைக் மீது மோதியதோடு அல்லாமல் சக்கரத்தில் சிக்கிய பைக்கை தீப்பொறி பறக்க 2.5 கி.மீ தூரம் லாரி ஓட்டுநர் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது லாரி மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியது மட்டுமல்லாமல் சட்டென லாரியின் படிக்கட்டு பகுதியில் தொற்றிக்கொண்டார்.
இதையும் படிங்க: தேர்தல் நாளில் விடுமுறை மறுப்பு! பிளிப்கார்ட், பிக் பாஸ்கெட் நிறுவனங்கள் மீது புகார்!
ஆனால், விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரியின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனத்தை தீப்பொறி பறக்க சுமார் 2.5 கி.மீ தூரம் லாரி ஓட்டுநர் இழுத்துச் சென்றார். லாரியின் கதவில் தொங்கியவாறு லாரி ஓட்டுநரிடம் வாலிபர் நியாயம் கேட்டார். எதையும் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் லாரியை ஓட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் 2.5 கி.மீ தூரம் பைக்கை இழுத்துச் சென்ற லாரி, கார் மீது மோதி நின்றது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா! ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை! கல்லா கட்டிய தமிழக அரசு! எந்த மண்டலத்தில் அதிகம் தெரியுமா?