உத்தரகாண்ட் சுரங்க விபத்தி மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி முதல் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தோண்டும்போது இரும்பு குப்பைகள் மேலே வருவதால் துளைப்பதற்கான இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்பு படை வீரர்களில் ஒருவரான ஷைலேஷ் குலாட்டி ஏசியாநெட் நியூஸ்-க்கு சில பிரத்யேக தகவல்களை வழங்கி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக அமைக்கப்படும் சாலை முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் 5-6 மீட்டர் தோண்ட வேண்டிய நிலையில், எதிரில் இரும்புக் குப்பைகள் வருவதால் தோண்டும் பணியை நிறுத்த வேண்டியதாயிற்று. இடிபாடுகளில் இரும்பு குழாய்கள், கம்பிகள் உள்ளன. டெல்லியில் இருந்து வந்த நிபுணர்கள் குழு இயந்திரத்தை சரிசெய்து, அதன் பிறகு தடையாக இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு மீண்டும் துளையிடும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் தொழிலாளர்களின் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொடர்ந்து பேசிய அவர் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் “ உணவுக் குழாயைச் செருகியிருந்தோம். அது 6 அங்குல அகலம் இருந்த அந்த குழாய் போய்விட்டது. தற்போது 800 மி.மீ., குழாய் பதிக்கும் பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எல்லாம் நல்லபடியாக நடந்திருந்தால் இந்நேரம் வேலை முடிந்திருக்கும். மீட்புப்பணி எப்போது முடியும் என்று இப்போதே கூறுவது கடினம். டெல்லியில் இருந்து வரும் நிபுணர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்.” என்று கூறினார்.
மேலும் பேசிய கைலாஷ் குலாட்டி "உள்ளே சிக்கியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. உணவு வழங்க குழாய் மூலம் பேச்சு நடக்கிறது. குரல் தெளிவாக செல்கிறது. கேமராக்கள் பொருத்தி உள்ளே நிலைமையை பார்க்கிறோம். அவர்களின் உடல்நிலை நன்றாக உள்ளது. இருப்பினும் அவர்களின் மனநிலை மோசமடைந்து வருகிறது.தொழிலாளர்களுக்கு முழுமையான உணவு வழங்கப்படுகிறது.கயிறுகள் அமைத்துள்ளோம்.இதன் மூலம் உணவு அனுப்பப்படுகிறது.முன்பு உலர் பழங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.இப்போது ரொட்டி,சாதம் போன்ற முழுமையான உணவு வழங்கப்படுகிறது." என்று தெரிவித்தார்.
உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து.. விரைவில் மீட்கப்பட உள்ள 41 தொழிலாளர்கள்.. மீட்புப்பணிகள் தீவிரம்..
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்திரகாசி மாவட்டத்தில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 41 பணியாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணி 12-வது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவ பொறியாளர்கள், இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட 8 அரசு நிறுவனங்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.