உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 12 அன்று, சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 4.5 கி.மீ. நீள சுரங்கப்பாதையில் 205 முதல் 260 மீட்டர் வரையிலான பகுதி இடிந்தது. இதனால் 260 மீட்டருக்கு அப்பால் இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கக்கொண்டனர்.
17 நாட்களாக சுரங்க இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் கயிற்றில் கட்டப்பட்ட சக்கர ஸ்ட்ரெச்சர்களின் உதவியுடன் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர்.
உத்தராகண்ட் சுரங்க விபத்து: 17 நாட்கள்.. 41 தொழிலாளர்கள் - என்ன நடந்தது.? டைம்லைன் இதோ !!
80 மீட்டர் விட்டம் கொண்ட குழாய் பாதை வழியாக தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நபரையும் வெளியே அழைத்துவர 2 முதல் 3 நிமிடங்கள் ஆனது. வெளியே வந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதிப்பு ஏதும் இல்லாமல் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளனர்.
உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே. சிங் ஆகியோர் தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்று அவர்களுடன் உரையாடினர்.
வெளியே வந்த தொழிலாளர்கள் அனைவரும் ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு குறைந்தது ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.
மெட்ராஸ் சேப்பர்ஸ் யாரு? சுரங்க மீட்புப் பணியில் களமிறங்கிய படையின் பின்னணி தெரியுமா?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D