இடிபாடுகளில் துளையிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்ததை அடுத்து மெட்ராஸ் சேப்பர்ஸ் குழு வரவழைக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில், சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்துவரும் போராட்டம் 18 நாட்களாக நீடிக்கிறது.
இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் சேப்பர்ஸ் பிரிவு ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்தை அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இடிபாடுகளில் துளையிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்ததை அடுத்து மெட்ராஸ் சேப்பர்ஸ் குழு வரவழைக்கப்பட்டது.
undefined
மெட்ராஸ் சேப்பர்ஸ் என்றால் என்ன?
மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் என்று அழைக்கப்படும் மெட்ராஸ் சாப்பர்ஸ் தற்போது இந்திய ராணுவத்தின் மூன்று பொறியியல் படைப்பிரிவுகளில் ஒன்றாகும். பெங்கால் சேப்பர்ஸ் மற்றும் பாம்பே சேப்பர்ஸ் ஆகியவை மற்ற இரண்டு படைகள் ஆகும். மெட்ராஸ் சேப்பர்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த படைப்பிரிவின் தலைமையகம் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ளது.
ஓடிடி ரசிகர்களுக்கு சூப்பர் சான்ஸ்! ஏர்டெல், ஜியா போட்டியால் ஃப்ரீயா கிடைக்கும் நெட்பிளிக்ஸ்!
மெட்ராஸ் சேப்பர்ஸ் படை என்ன செய்யும்?
மெட்ராஸ் சேப்பர்ஸ் படை போர்க் காலத்தில் இந்திய ராணுவத்திற்கு பொறியியல் தொடர்பான உதவிகளை வழங்கும். கண்ணிவெடியை அகற்றுவது, அகழிகள் கட்டுவது, போரின் போது தேவைப்படும் ராணுவ பயன்பாட்டுக்கான பாலங்களை உருவாக்குவது ஆகியவை இந்தப் படையின் பணிகள். போர் நடைபெறாத காலத்தில், ராணுவத்திற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை மெட்ராஸ் சேப்பர்ஸ் படை மேற்கொள்கிறது.
போர்களில் மெட்ராஸ் சேப்பர்ஸ் பங்கு என்ன?
மெட்ராஸ் சேப்பர்ஸ் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இரண்டு உலகப் போர்களிலும் பங்கு பெற்றிருந்தது. பிரான்ஸ் & ஃபிளாண்டர்ஸ் (1914-15), மெசபடோமியா (1915-18), வட ஆப்பிரிக்கா (1940- 43), சிரியா (1941), பர்மா (மியான்மர்) (1942-45), மற்றும் இத்தாலி (1943-45) ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு, முதல் காஷ்மீர் போர் (1948), இந்தியா-பாகிஸ்தான் போர் (1971) மற்றும் பல ஆயுத மோதல்களில் மெட்ராஸ் சேப்பர்ஸ் பங்கேற்றுள்ளது.
சைலென்ட்டா ரிலீஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A15 ஸ்மார்ட்போன்! அப்படி என்ன சீக்ரெட் இருக்கு?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D