உத்தரகாண்ட் சுரங்கத்தினுள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்க 15 மணி நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 41 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியானது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மீட்புக் குழுவானது கிடைமட்ட துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுரங்கப்பாதையில் குழாய்களைச் செருகி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இடிபாடுகளுக்கு நடுவில் இரும்புக் கம்பிகள் இருப்பதால் அதனை வெட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்பு பணிகளில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தினுள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்க 15 மணி நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலக முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறுகையில், “துளையிடும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளே இருக்கும் தொழிலாளர்களை நெருங்குவதற்கு இன்னும் 12 முதல் 15 மணி நேரம் ஆகலாம். அதன்பின்னர் ஒவ்வொரு தொழிலாளர்களாக வெளியே மீட்டுக் கொண்டு வர மேலும் மூன்று மணி நேரங்கள் எடுக்கும். இந்தப்பணி தேசிய பேரிடர் மீட்பு படை உதவியுடன் செயல்படுத்தப்படும்.” என்றார்.
பாஜக 15 சீட்டு தாண்டுவாங்களான்னு பாக்கலாம்: சத்தீஸ்கர் முதல்வர் பொளேர்!
அதேபோல், நாங்கள் கதவின் முன்னால் நிற்கிறோம்.விரைவில் மீட்பு பணிகள் முடிவுக்கு வரும் என்று சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்துள்ளார். சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் சுரங்கத்துக்குள் 45 மீட்டர் தூரம் தோண்டப்பட்டுள்ளது., இன்னும் 4 முதல் 5 மீட்டர் தூரம் தோண்டினாலே தொழிலாளர்களை மீட்டு விடலாம் என அங்கிருந்து வரும் செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன.
सिलक्यारा, उत्तरकाशी में निर्माणाधीन टनल में फँसे श्रमिकों को सुरक्षित बाहर निकालने हेतु चल रहे बचाव कार्यों में पिछले 11 दिनों से बेहतर समन्वय एवं समर्पण भाव के साथ कार्य कर रही केंद्रीय एजेंसियों व प्रदेश प्रशासन के सदस्यों एवं अथक परिश्रम के साथ कार्य कर रहे श्रमिकों से भेंट… pic.twitter.com/Q4Ioo0BOJN
— Pushkar Singh Dhami (@pushkardhami)
இதனிடையே 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு உடனடியாக மருத்து உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆம்புலன்ஸ்கல், மருத்துவர்கள் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளது.
மீட்பு பணிகள் குறித்து கார்வால் ரேஞ் ஐஜி கே.எஸ்.நக்ன்யால் கூறுகையில், “மீட்பு முயற்சி முன்னேற்றத்தில் உள்ளது, விரைவில் மீட்பு பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இயந்திர வேலை என்பதால் குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்ய இயலாது. இரவிலும் மீட்பு பணி தொடரும்.” என்றார்.