Uttarakhand Tunnel Rescue : கடந்த நவம்பர் 12ம் தேதி உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பணியாளர்கள் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இன்னும் சிறிது நேரத்தில் மீட்கப்பட உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை சரிவு கடந்த 12 நவம்பர், 2023 அன்று ஏற்பட்டது, கட்டுமானத்தில் இருந்த சில்க்யாரா வளைவு - பர்கோட் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கினர்.
ஆனால் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த அவசரகால பொது பாதுகாப்பிற்காக இருக்கும் இடத்தில் அந்த 41 பணியாளர்களும் பத்திரமாக தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர். கடந்த 17 நாட்களாக பல்வேறு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும், இயந்திரங்கள் போராடிய நிலையில் இன்று நவம்பர் 28ம் தேதி இன்னும் சிறிது நேரத்தில் மீட்கப்பட உள்ளனர். பத்து பேர் மீட்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், அந்த செய்தி இன்னும் உறுதியாகவில்லை.
undefined
கொல்லத்தில் காரில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு..! எஸ்கேப்பான கடத்தல் கும்பல்..
தயார் நிலையில் உள்ள 41 ஆம்புலன்ஸ்களில் அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர். அதே போல தயார் நிலையில் சில ஹெலிகாப்டர்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 12 முதல் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும், மீட்புக்குப் பின் கொண்டுவரப்படும் சின்யாலிசூர் சமூக சுகாதார மையமானது தயாரான நிலையில் உள்ளது.