அயோத்தியில் ராமர் கோவிலை 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவில் தளத்தை கலைநயத்துடன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பல்வேறு திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகிறது. விமானத்தளம் அமைப்பது, ரயில் சேவை உருவாக்குவது என்று அனைத்துப் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே உத்தரப்பிரதேச அரசு மியூசியம் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கான அனுமதியை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வழங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக மியூசியம் அமைப்பது குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசி இருந்தார். மியூசியம் அமைப்பதற்காக பல்வேறு இடங்களை அயோத்தி நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இந்த மியூசியத்தில் நாட்டின் புகழ்பெற்ற கோவில்களின் வரலாற்று குறிப்புகள் வைக்கப்படும். இது கோவில்களின் கட்டிடக்கலையின் பயணம் மற்றும் அவற்றின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்ஜெட்டை விரைவில் உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
undefined
அந்த நாள் மட்டும் ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் படும்: படு ஜோராக தயாராகி வரும் அயோத்தி கோயில்!
மியூசியம் அமைப்பதற்கு என்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சராயு நதிக்கரையில் 25 ஏக்கரில் மியூசியம் அமைப்பதற்கு நிலத்தை கோரி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இடம் உறுதியான பின்னர் மியூசியம் அமைக்கும் திட்டப் பணிகளை மாநில சுற்றுலா துறை ஏற்று நடத்தும். இந்த திட்டத்தை செயல்படுத்த நாடு முழுவதிலும் இருந்து கோவில் கட்டிடக்கலை தெரிந்த வல்லுனர்கள் அயோத்திக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரமாண்டமாக வளரும் அயோத்தி ராமர் கோவில்.. கட்டுமானத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது தெரியுமா?
ராமர் கோவில் குடமுழுக்கு நடப்பதற்கு முன்பாகவே மியூசியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அயோத்தியில் மட்டும் 30,923 கோடியில் 263 திட்டப்பணிகள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் அகலப்படுத்துதல், ரிங் ரோடு அமைத்தல், அயோத்தியில் விமான நிலையம் அமைத்தல், ரயில் நிலையங்கள் புதுப்பித்தல், பஸ் நிலையங்கள் புதுப்பித்தல் என்று பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
ராமர் கோவில் குட முழுக்கு விழாவை 2024, ஜனவரி மாதம் 15 - 24ஆம் தேதிக்குள் நடத்துவதற்கு ராமர் கோவில் டிரஸ்ட் முடிவு செய்துள்ளது. ராமர் சிலைக்கு அபிஷேகம் நடத்துவதற்கு பிரதமர் மோடிக்கு டிரஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது.