உத்தரப் பிரதேசம்.. சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது - முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

By Ansgar R  |  First Published Sep 9, 2024, 6:07 PM IST

CM Yogi Adityanath : நொய்டாவில் IKEAவின் கிளைக்கு இன்று திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.


முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டாவில் IKEA நிறுவன கிளைக்கு இன்று திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர், கடந்த ஏழரை ஆண்டுகளில், உத்தரப் பிரதேசம் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்று கூறினார். மேலும் அந்த விஷயத்திற்கு "IKEA இந்தியா" ஒரு முக்கிய உதாரணம் என்று அவர் குறிப்பிட்டார். IKEA என்பது உலக அளவில் பல நாடுகளில் செயல்படும் ஒரு பல்பொருள் அங்காடி ஆகும்.

நமது மாநிலத்தில் IKEA இந்தியாவின் 5,500 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்திற்கு நன்றி தெரிவித்த முதல்வர் யோகி, உத்தரபிரதேசம் இப்போது இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் முதலீட்டு மாநிலமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் இந்த மாநிலம் தனது வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது என்றும் கூறினார். IKEA சில்லறை விற்பனைக் கடை, ஹோட்டல், அலுவலக இடங்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இங்கா மையங்களின் லட்சியத் திட்டத்தை பற்றி முதல்வர் யோகி எடுத்துரைத்தார். 

Tap to resize

Latest Videos

undefined

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: போலி மருத்துவரின் பயிற்சிக்கு இறையான சிறுவனின் உயிர்

மேலும் இந்த விரிவான வளர்ச்சி, சுமார் 9,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரம் இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கிறது. 2017 முதல், உத்தரப் பிரதேசம் உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய முதலீட்டு வாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது என்றார் அவர்.  

முதல்வர் யோகி, மாநிலத்தின் ODOP (ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு) திட்டத்தை நாடு முழுவதிற்கும் ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும் என்று கூறினார். மேலும் உத்திரபிரதேசத்தின் வலுவான சட்டம் ஒழுங்கு சூழலால் எளிதாக வணிகம் செய்வதில் அது முன்னணி நிலையில் உள்ளது என்றார் அவர். முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் பேசுகையில், "இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம், தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் 9.2 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக உருவெடுத்து வருகின்றது, இந்தியாவின் வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக வேகமாக முன்னேறி வருகிறது" என்றார்.

2017ம் ஆண்டு உத்தரப் பிரதேசம் தனது தொழில் வளர்ச்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தியதைக் குறிப்பிட்டு பேசிய அவர், "அப்போது, ​​பிரதமர் நரேந்திர மோடி முதலீட்டை வேலைவாய்ப்புடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். IKEA இந்தியா ஸ்டோரின் இந்த ஆரம்பம் கூட அந்த வழிகாட்டுதலின் விளைவுதான் என்றார் அவர். 

நாட்டின் மிகப்பெரிய மற்றும் திறமையான இளைஞர்கள் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் முன்னிலையில் உள்ளது, கடந்த ஏழரை ஆண்டுகளில் மாநிலத்தின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. 
உத்தரப்பிரதேசம் 27 வெவ்வேறு துறைகளை உள்ளடக்கிய துறைசார் கொள்கை மூலம் தேசிய வளர்ச்சிக்கு தீவிரமாக பங்களிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் யமுனா ஆணையப் பகுதிகள், பொதுப் போக்குவரத்து வசதிகள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நொய்டா சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

"கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழித்தடத்துடன் குறுக்கிடுவதால், இந்த பகுதி தளவாடங்களுக்கும் முக்கியமானது. அதன் மகத்தான ஆற்றலுடன், உத்தரபிரதேசம் இந்தியாவிற்கும் உலக சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

IKEA ஒரு ஸ்வீடன் நாட்டு நிறுவனம் என்பதால், இந்நிகழ்ச்சியில் ஸ்வீடன் தூதர் ஜான் தெஸ்லெஃப், உத்தரபிரதேசத்தின் தொழில்துறை மேம்பாட்டு அமைச்சர் நந்த் கோபால் குப்தா 'நந்தி', எம்எஸ்எம்இ அமைச்சர் ராகேஷ் சச்சன், தொழில்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சைனி, தலைமைச் செயலாளர் மனோஜ் சிங், ஐகியா இந்தியா சிஇஓ சுசன்னே புல்வெரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெங்களூருவில் கன்னட மொழி பேசாவிட்டால் கன்னடர்களின் நெஞ்சில் இடமில்லை! வைரலாகும் ட்வீட்!

click me!