டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டு, கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க வலியுறுத்தி உள்ளது.
டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை என்று அழைக்கப்படும் Mpox வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய நோயாளிக்கு Mpox அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று மத்திய அரசு கூறியிருந்தது. மேலும் அந்த நபரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. நோயாளிக்கு Mpox தொற்று பாதிப்பு என்பதை உறுதிப்படுத்த தற்போது சோதனை நடந்து வருகிறது என்று மத்திய அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில் மத்திய சுகாதார செயலாளர் அபூர்வ சந்திரா, திங்களன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு Mpox தொடர்பான முறையான ஆலோசனையை வழங்கினார். மேலும் வைரஸ் குறித்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க வலியுறுத்தி உள்ளார்.
undefined
உலக சுகாதார நிறுவனம் (WHO) Mpox வைரஸை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த நிலையில் இந்த எடுக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில் (என்ஐவி) பரிசோதிக்கப்பட்ட எந்த மாதிரிகளிலும் இதுவரை Mpox பாசிட்டிவ் இல்லை என்ற போதிலும், இந்தியாவில் வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான உத்திகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.
மொபைல் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமா? WHO ஆய்வில் புதிய தகவல்!
Mpox வழக்குகளை முன்கூட்டியே கண்டறிவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கண்காணிப்பு உத்தியை வடிவமைத்தது,ஆய்வக சோதனை, மருத்துவ மேலாண்மை நெறிமுறைகள் மற்றும் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் உள்ள மூத்த அதிகாரிகள், சுகாதார வசதிகளில் பொது சுகாதாரத் தயார்நிலையை தவறாமல் மதிப்பாய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் இரண்டிற்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்களுடன். மருத்துவமனைகள் பராமரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Mpox பரவுதல், தடுப்பு மற்றும் சரியான நேரத்தில் அறிக்கையிடல் தொடர்பான பொது விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களும் இந்த நோய், பரவும் விதம், சரியான நேரத்தில் அறிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து சமூகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டாலும், மக்களிடையே தேவையற்ற பீதியைத் தடுக்க வேண்டியது அவசியம்" என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Mpox வைரஸ் என்பது ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் நீண்டகால பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது, ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு உலகளவில் மீண்டும் வேகமாக பரவியது. மொத்தம் 121 நாடுகளில் Mpox பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகக் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட திக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் Mpox பரவுகிறது, மேலும் அடிக்கடி காய்ச்சல், சொறி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும். பெரும்பாலான இந்த வைரஸ் பாதிப்பு லேசானவை என்றாலும், இந்த நோய் உலகளவில் 223 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வயிற்றில் இரட்டை குழந்தை இருந்தா இந்த அறிகுறிகள் தெரியும்.. செக் பண்ணுங்க!
தயார்நிலையை உறுதி செய்வதற்காக, இந்தியாவின் நோய் கண்காணிப்பு அமைப்பு, வைரஸை தொடர்ந்து கண்காணித்து, விரைவான பதிலை உறுதி செய்யும். முன்கூட்டியே கண்டறிதல், விரைவாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் நாட்டிற்குள் சாத்தியமான பரவலை தடுப்பதற்கு அமைச்சகம் வலுவான முக்கியத்துவம் அளித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கடுமையான தொடர்புத் தடமறிதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.