MonkeyPox : அண்மையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
சமீபத்தில் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய ஒரு இளைஞருக்கு, தற்போது Mpox (குரங்கு அம்மை) நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம் குரங்கம்மை நோய்க்கான சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அந்த நோயாளி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும், தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
குரங்கம்மை இருப்பதை உறுதிப்படுத்த, அந்த நோயாளியின் மாதிரிகள் இப்பொது பரிசோதிக்கப்படுகின்றன. அரசால் நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படி இந்த வழக்கு நிர்வகிக்கப்படுகிறது என்றும், மேலும் அவரிடம் இருந்து நோய் பரவலுக்கு வாய்ப்பு உள்ளதா என்றும் இப்பொது அதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாம்பை வாயில் வைத்து சாகசம்: வைரலாக நினைத்து உயிரை விட்ட பரிதாபம்
ஆரம்ப நிலையிலேயே நோயை தடுப்பதற்கான பணிகள் தான் இப்பொது NCDC ஆல் நடத்தப்பட்டு வருகின்றது என்றும், இதனால் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட பயணம் தொடர்பான வழக்குகளை சமாளிக்க, நாடு முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், சாத்தியமான ஆபத்தை நிர்வகிப்பதற்கும் குறைப்பதற்கும் வலுவான நடவடிக்கைகள் உள்ளன என்றும் சுகாதார அமைச்சகம் மேலும் கூறியது.
மேலும் இந்த விஷயத்தில் மக்கள் யாரும் தேவையற்ற பீதி அடையவேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குரங்கம்மையை பொறுத்தவரை அதிக காய்ச்சல் முதல் அறிகுறியாகும், முகத்தில், வாயின் உள்ளே அல்லது உடலின் பிற பகுதிகளில் பருக்கள் அல்லது கொப்புளங்கள் போல் தோற்றமளிக்கும் சொறி போன்ற அமைப்பு உருவாகுதலும் ஒரு அறிகுறியாகும்.
பாதிக்கப்பட்ட மிருகங்களிடம் இருந்து, அல்லது அந்த மிருகங்களின் மாமிசத்தை உண்ணும்போது இந்த நோய் மனிதனுக்கு பரவுகிறது. இது உயிருக்கு ஆபத்தானது என்றாலும் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது வயிறா? கல் குவாரியா? முதியவரின் வயிற்றில் இருந்து 6,000 கற்கள் அகற்றம்