உத்தரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் நான்கு நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று கூடியுள்லது. இந்த கூட்டத்தொடரில், உறுப்பினர்கள் மொபைல் போன்கள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அவைக்குள் எடுத்துச் செல்வதைத் தடைசெய்யும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 28ஆம் தேதி (இன்று) தொடங்கி, டிசம்பர் 1ஆம் தேதி முடிவடைகிறது. இந்த கூட்டத்தொடரில், எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகள் செல்போன்கள் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அம்மாநில சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
undefined
செல்போன்கள் தவிர, இந்த அமர்வின் போது அவைக்குள் கொடிகள் மற்றும் பதாகைகளை எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன், குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக அம்மாநில சபாநாயகர் சதீஷ் மஹானா அறிவித்தார். அப்போது, அவைக்குள் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துச் செல்வதைத் தடுக்கும் புதிய விதி சட்டப்பேரவைல் கூட்டத்தொடரின் போது அமல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
இந்த தடை உத்தரவானது, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, உத்தரப்பிரதேச சட்டமன்றம் 202இன் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டது. இருப்பினும், கட்சி வேறுபாடுகளை மீறி, மொபைல் போன் விதியை தளர்த்துமாறு சபாநாயகரிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
தெலங்கானா தேர்தல்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் தலைவர்கள்!
சமாஜ்வாடி கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ் குமார் பாண்டே கூறுகையில், “மக்கள் பிரதிநிதிகள் அவையில் இருக்கும் நீண்ட நேரம் கூட, தங்கள் தொகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும் அல்லது. முக்கிய செய்திகளை எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிக்க அவர்களது தனிச் செயலாளர்களை அவைக்குள் அனுமதிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவும் சபாநாயகரிடம் விதியை தளர்த்துமாறு கோரினார். அதேபோல், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ உமா சங்கர் சிங், உறுப்பினர்கள் மொபைல்களை சுவிட்ச் ஆஃப் அல்லது சைலண்ட் மோடில் வைக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொள்ளலாம் என்றார். ராஜேஷ்வர் சிங் மற்றும் யோகேஷ் சுக்லா போன்ற ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட, செல்போன் விதியை தளர்த்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.