உத்தரப்பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, சாலையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தால், சம்பவ இடத்திலேயே இறந்த சமத்துவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கர் நகரை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத அந்த 17 வயது இளம் பெண், பள்ளி முடிந்து தனது சைக்கிளில், தோழிகளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அந்த கிளம்பி பெண்ணின் துப்பட்டாவை பிடித்து கொடூரமாக இழுத்துள்ளனர். இதில் அந்த பள்ளி மாணவி, தடுமாறி சாலையில் விழுந்த நிலையில், பின்னால் வந்த வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
அந்த மாவட்டத்தின் ஹன்ஸ்வர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹிராபூர் மார்க்கெட் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வெளியான சிசிடிவி காட்சிகளில், இரு பள்ளி மாணவிகள் சாலையில் தங்கள் சைக்கிளில் செல்கின்றனர், அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவர் அந்த மாணவிகளில் ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுக்கிறார்.
undefined
ரூ.13,000 கோடி மதிப்பிலான விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
இதனால் நிலைதடுமாறிய அந்த இளம் பெண், வலதுபக்கமாக விழுந்தபோது பொது பின்னால் வந்த ஒரு இரு சக்கர வாகனம் அவர் மீது பயங்கரமாக மோதுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த பெண், சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் பைசல், ஷாபாஸ் மற்றும் அர்பாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேற்று மூவரையும் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் இன்று மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, காவல்துறையின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதற்கு பதிலடியாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: ரூ.10,000 நிதியுதவு - மத்திய அரசு முடிவு!