Goa Election Results 2022 : காங்கிரசுக்கு ‘திகில்’ காட்டிய பாரிக்கர் மகன்.. கோவாவில் திடீர் திருப்பம் !!

By Raghupati RFirst Published Mar 10, 2022, 1:13 PM IST
Highlights

Goa Election Results 2022 : காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை ரிசார்ட்டில் வைத்துள்ளது. வேட்பாளர்களிடம் தாங்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டோம் என காங்கிரஸ் தலைமை சத்தியம் பெற்றுவிட்டது. 

40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 11.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17, பாரதிய ஜனதா 13 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 28.4 சதவீத வாக்குகளும், பாரதிய ஜனதா 32.5 சதவீத வாக்குகளும் பெற்று இருந்தன. எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது.

பா.ஜ.க. ஆட்சி மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கோவா மாநிலத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 2017-ம் ஆண்டு தேர்தலின் போது வேலை தருவதாக சொல்லிதான் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. ஆனால் வேலைவாய்ப்பை அவர்களால் உருவாக்க இயலவில்லை. 

இதையே திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் பிரசார யுக்தியாக கையில் எடுத்துள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளன.  மேலும் ஆம்ஆத்மி ஒரு இடத்திலும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், முடிவுகள் முழுமையாக வெளிவரும்போது பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கடந்த சட்டசபை தேர்தலை போல், இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைக்கும். கோவா முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். பனாஜி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உத்பால் வாய்ப்பு கேட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

 

பாஜக வேட்பாளராக அட்டன்சியொ மான்செரெட் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து உத்பால் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகி பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்நிலையில், பனாஜி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பாஜக வேட்பாளருக்கு சுயேட்சையாக போட்டியிடும் உத்பால் பாரிக்கருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி, 4 ஆயிரத்து 397 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் அட்டன்சியொ முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பாளர் உத்பால் பாரிக்கர் 3 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். இந்த இருவருக்கும் அடுத்த படியாக 1,898 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் எல்விஸ் கோமீஸ் 3-வது இடத்தில் உள்ளார். 

பாஜக வேட்பாளருக்கும் உத்பால் பாரிக்கருக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் மிகக்குறைவாக உள்ளதால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இவரது வாக்கு சதவீதம் 33.84 சதவீதம். பின்னடைவாக இருந்தாலும் உத்பால், பாஜக வேட்பாளருக்கு கடுமையான டஃப் கொடுத்தார். காங்கிரஸ், ஆம் ஆத்மி, உள்ளூர் கட்சிகள் செய்ய முடியாததை உத்பால் சுயேச்சையாக போட்டியிட்டு செய்துள்ளார்.

கடந்த முறை போல் ஆட்சியை பிடிக்க பாஜகவும், இந்த முறை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சியும் என்னென்ன செய்யும் என்று அரசியல் நோக்கர்கள் மட்டுமல்ல, வாக்காளர்களும் எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

click me!