Uttarakhand Election Results 2022 : 'வலிமை' காட்டும் பாஜக.. உத்தரகாண்டையும் விட்டு வைக்கவில்லை !!

Published : Mar 10, 2022, 11:54 AM IST
Uttarakhand Election Results 2022 : 'வலிமை' காட்டும் பாஜக.. உத்தரகாண்டையும் விட்டு வைக்கவில்லை !!

சுருக்கம்

Uttarakhand Election Results 2022 : உத்தரகாண்ட் மாநிலத்தில் 35 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டி முன்னிலையில் இருக்கிறது பாஜக.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 65.37 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆண் வாக்காளர்கள் 62.06 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 67.20 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.  70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் 82.4 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 56, காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. காங்கிரசுக்கு 33.5 சதவீதம், பாரதிய ஜனதாவுக்கு 46.5 சதவீதம் வாக்குகள் கிடைத்து இருந்தன.

இந்த தடவையும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக மோதி வருகின்றன. ஆனால் ஆம் ஆத்மி இடையில் புகுந்துள்ளது. இதனால் ஆம் ஆத்மி பிரிக்கும் வாக்குகள் காங்கிரசை பாதிக்குமா, அல்லது பாரதிய ஜனதாவை பாதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 24 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பை தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. 

இதேபோன்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் அறிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி ஒருபடி மேலே சென்று காவல் துறையில் 40 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. அங்கு பிரசாரத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி, விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்து பேசினார். மேலும் பெண்களுக்கு குறைந்த விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனால் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மீண்டும் அங்கு ஆட்சியை கைப்பற்றுவோம் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் காங்கிரசின் பிரசாரம் காரணமாக உத்தரகாண்ட் தேர்தல் முடிவு யாருக்கும் உறுதியான, சாதகமான நிலையில் இல்லை என்பதே உண்மையாகும். தற்போதைய நிலையில் 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த முறை பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.

இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் முன்னிலை பெற்றது. இது கடந்த முறை வென்ற தொகுதிகளை காட்டிலும் தற்போது 10 இடங்கள் கூடுதல் ஆகும். பகுஜன் சமாஜ் -2 ஆம் ஆத்மி 1 இடத்திலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர், அங்கு எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது இல்லை. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் 35 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டி முன்னிலையில் இருக்கிறது பாஜக. பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், தற்போது பாஜக தக்க வைத்து சாதனை படைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.அம்மாநில முதல்வரான பாஜகவை சேர்ந்த புஷ்கர் தமி, கதிமா தொகுதியிலும், காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக கருதப்பட்ட ஹரீஸ் ராவத் லால்குன் தொகுதியிலும் பின்னடைவை சந்தித்து உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை