ரூ.2.5 லட்சம் வரை எந்தவித துன்புறுத்தலும் கிடையாது – பிரதமர் மோடியே உறுதி...!!!

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 02:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
ரூ.2.5 லட்சம் வரை எந்தவித துன்புறுத்தலும் கிடையாது – பிரதமர் மோடியே உறுதி...!!!

சுருக்கம்

சிறு வியாபாரிகள், இல்லத்தரசிகள், கலைஞர்கள், பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணத்தை வங்கியில் இரண்டரை லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என பிரதமர் நரேந்திர மோடி, முதன்முறையாக பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதன் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை முடக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, குருவிபோல பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அவசர தேவைக்கு வங்கிக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே பணத்தை வைத்திருந்தவர்களும், வங்கியில் கணக்கு இல்லாமல் பணத்தை வைத்திருந்தவர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், தற்போது வங்கியில் பணத்தை செலுத்தினால், அதற்கு வருமான வரித்துறையினர், வரி செலுத்தும்படி கூறுவார்கள் என திணறி வந்தனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பணம் பெறுவதற்காக வரிசையில் நின்று ஸ்டன்ட் செய்தனர். இது பாஜக ஆளும் மத்திய அரசுக்கு சிறு பின்னடைவை ஏற்படுத்தியது. 

மேலும் ம.பி, உ.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் சில திமிர் பிடித்த வங்கி அதிகாரிகளின் அலட்சிய வார்த்தைகளால் தாங்கள் சேர்த்து வைத்த பணம் செல்லாது என்ற அதிர்ச்சியில் ஒரு சிலர் மரணமடைந்தனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சகத்தினர் ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடியிடம் இது குறித்து விவாதித்தனர். பின்னர் நாடு முழுவதும் உள்ள முக்கிய தினசரி நாளிதழ்களில் தெளிவான விளம்பரம் கொடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து மிக விலாவாரியாக ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் யாரும் பயப்பட தேவையில்லையென்றும் எந்த வித துன்புறுத்தலோ அல்லது விசாரணைகளோ இருக்காது சிறு வியாபாரிகள், இல்லத்தரசிகள் ,பணியாளர்கள், விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை.

டிசம்பர் 30 க்குள் மெதுவாக மாற்றி கொள்ளுங்கள் என மோடியின் புகைப்படத்தோடு மத்திய நிதி அமைச்சகம் விளமபரம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்தவுடன்தான் பல கோடி சிறு வியாபாரிகள் நிம்மதி பேரு மூச்சு விட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இனி இஷ்டத்துக்கு புக் பண்ண முடியாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்: 21 நாட்கள் கட்டாய இடைவெளி
குடியரசுத் தலைவரை அவமதித்ததா மேற்கு வங்க அரசு? பிரதமர் மோடி கண்டனம்! மம்தா விளக்கம்!