மத்திய பணியாளர் தேர்வாணயமான UPSC இன்று சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவுகளை அறிவித்தது
மத்திய பணியாளர் தேர்வாணயமான UPSC இன்று சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவுகளை அறிவித்தது. கடந்த ஆண்டு இந்த தேர்வில் கலந்து கொண்டவர்கள் தகுதிப் பட்டியலை அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இல் பார்க்கலாம். இதில் ஆதித்யா ஸ்ரீவஸ்தா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அனிமேஷ் பிரதான் 2-வது இடத்தையும், டோனூரு அனன்யா ரெட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு, இந்திய நிர்வாகப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி, மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1016 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 347 பொது வேட்பாளர்கள், 116 EWS பிரிவு வேட்பாளர்கள், 303 OBC, 165 SC மற்றும் 86 ST தேர்வர்கள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியல் யுபிஎஸ்சியால் வெளியிடப்பட்டுள்ளது.
undefined
முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல்
ரேங்க் 1: ஆதித்ய ஸ்ரீவஸ்தவா
ரேங்க் 2: அனிமேஷ் பிரதான்
ரேங்க் 3: டோனூரு அனன்யா ரெட்டி
ரேங்க் 4: பி கே சித்தார்த் ராம்குமார்
ரேங்க் 5: ருஹானி
ரேங்க் 6: சிருஷ்டி தபாஸ்
ரேங்க் 7: அன்மோல் ரத்தோர்
ரேங்க் 8: ஆஷிஷ் குமார்
ரேங்க் 9: நௌஷீன்
ரேங்க் 10: ஐஸ்வர்யம் பிரஜாபதி
UPSC CSE முதன்மை தேர்வுகள் 2024: எப்படி சரிபார்ப்பது?
UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் 2023 மே 28 அன்று நடத்தப்பட்டது, UPSC முதன்மைத் தேர்வு செப்டம்பர் 15, 16, 17, 23 மற்றும் 24, 2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இறுதி ஆளுமைத் தேர்வு/நேர்காணல் சுற்று ஜனவரி 2 முதல் ஏப்ரல் 9, 2024 வரை கட்டம் வாரியாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.