உ.பி. ,யின் அனைத்து சமுதாய மக்களிடமும் உயரும் செல்வாக்கு... மீண்டும் முதல்வராகிறார் யோகி ஆதித்யா நாத்..!

By Thiraviaraj RMFirst Published Aug 18, 2021, 5:51 PM IST
Highlights

உ.பி. மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. 
 

உ.பி. மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. 

உத்திரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் யோகி ஆதித்யா நாத் முதல்வராக இருந்து வருகிறார். இம்முறையும் அங்கு பாஜக வெற்றி பெறவே வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறன. கருத்துக் கணிப்புகள் சாதகமாக இருந்தாலும் பாஜக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  கடந்த ஆட்சியில் அங்கு வசிக்கும் குடிமகன்களை வேறுபாடு காட்டாமல் யோகி நாத் அரசு வழி நடத்தியதாக 92 சதவிகிதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  அவர்களில் 48 சதவிகிதம் பேர் யோகி ஆதித்யா நாத்துக்கும், 36 சதவிகிதம் பேர் அகிலேஷ் யாதவுக்கும், 16 சதவிகிதம் பேர் மற்றவர்களுக்கு வாக்களிக்க விரும்புவதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. 

இந்நிலையில், பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் சுகல்தேவ் தலைமையில், 10 சிறிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணியில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி இடம்பெற்று 100 இடங்களில் அக்கட்சி போட்டியிடும் எனவும் கூறப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் வலிமையாக இருந்த ஓவைசியின் கட்சி மகாராஷ்டிரா, பீகார் என பல மாநில தேர்தல்களையும் எதிர்கொண்டது. அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான ஒரு கட்சியாக உருவெடுக்க முனைந்து வருகிறது ஓவைசி கட்சி. பீகாரில் ஓவைசி கட்சிக்கு 5 இடங்கள் கிடைத்தது. ஆனால் தமிழகம், மேற்கு வங்க தேர்தல்களில் அந்த கட்சியால் திருப்பங்களைத் தர முடியவில்லை.

இப்போது உத்த்ரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் களத்துக்கும் வரக் காத்திருக்கிறது. ஜாதி கட்சி கூட்டணியை உடைத்த பாஜக ராஜ்பாரின் தலைமையிலான ஓவைசி கட்சி இடம்பெறுவதால் முஸ்லிம் வாக்குகளை நம்பி இருந்த சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பான திருப்பங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. பாஜக ஓட்டுக்கள் பாஜகவுக்கே கிடைக்கும். ஓவைசியால் முஸ்லீம் வாக்குகளை கவர இயலாது. 

அதற்காக பாஜக சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.  இஸ்லாமியர்களின் வாக்கு பாஜகவுக்கு 3 சதவிகிதம் மட்டுமே கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.  அகிலேஷ் யாதவுக்கு 80 சதவிதம் கிடைக்கும். மாயாவதிக்கு 10 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சிக்கு 7 சதவிகிதமும் கிடைக்கும் எனக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  ஆனால் ஓவைசி கூட்டணி அமைத்தால் இஸ்லாமிய வாக்குகள் சிதறும் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் இஸ்லாமிய வாக்குகளை கவர பல்வேறு திட்டங்களை பாஜக வைத்துள்ளதாக கூறுகிறார்கள் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள்.  
 

click me!