உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்..! சர்வேயில் மக்கள் கருத்து

By karthikeyan VFirst Published Aug 18, 2021, 5:37 PM IST
Highlights

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விக்கு மக்கள் தங்களது பதிலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதன்படி, ராமர் கோவில் விவகாரம் உத்தர பிரதேச தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
 

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி சிறப்பாக நடந்துவந்தது. கொரோனா நெருக்கடி நிலையை எல்லாம் யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக எதிர்கொண்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டும் உணர்வுப்பூர்வமான விவகாரமும் முடிவுக்கு வந்து, ராமர் கோவில் கட்டப்பட்டுவருகிறது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரங்கள் எல்லாம் பிரதான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக பல்லாண்டுகளாக நீடித்துவந்த ராமர் கோவில் விவகாரம் கண்டிப்பாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததையடுத்து, கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டுவருகிறது.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற மக்களின் மனநிலையை பார்ப்போம். 

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேச மாநிலத்தில், கான்பூர், பந்தல்கண்ட், ஆவாத், பிரிஜ், காசி மற்றும் கோரக்‌ஷ் ஆகிய 6 மண்டலங்களில் கடந்த ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 4200 பேரிடம் ஏசியாநெட் நியூஸ் சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் மற்றும் யோகி ஆதித்யநாத் ஆட்சி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில், வரும் தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு கருத்து தெரிவித்தவர்களில், 33% பேர் மிக முக்கியமான தாக்கமாக இருக்கும் என்றும், 22% பேர் சராசரி என்றும், 32% பேர் பெரியளவில் தாக்கம் ஏதும் இருக்காது என்றும், 13% பேர் மிகக்குறவான தாக்கமே என்றும் பதிலளித்துள்ளனர்.
 

click me!