உ.பி., சட்டசபை தேர்தலில் பாஜக போட்டு வைத்துள்ள மாஸ்டர் ப்ளான்... இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 18, 2021, 5:19 PM IST
Highlights

ஒவ்வொருவரும் 5,000 சிறுபான்மையினர் வாக்குகளை இலக்காகக் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்கள். 
 

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினரை சென்றடைய, பாஜக ஒவ்வொரு தொகுதியிலும் 5,000 வாக்குகளை இலக்காகக் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது.

 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் செல்வாக்கு மிகுந்த 50 பேரை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் அருகில் உள்ள 100 முஸ்லிம் வாக்காளர்களை இலக்கு வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் 5,000 சிறுபான்மையினர் வாக்குகளை இலக்காகக் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்கள். 

உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி பொதுமக்களின் ஆதரவைப் பெறவும், தொழிலாளர்களை உற்சாகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. சிறுபான்மை சமூக வாக்குகளைப் பெறுவதை நோக்கம். இது குறித்து அக்கட்சியினர் கூறும்போது, ‘’கடந்த தேர்தல்களை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். கிட்டத்தட்ட 20 சதவீத தொகுதிகளில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோறகடிக்கப்பட்டோம். மேற்கு வங்காளத்தில் கூட, குறைந்த வாக்குகள் உள்ள கணிசமான இடங்களை நாங்கள் இழந்தோம்," என்று சிறுபான்மை மோர்ச்சா பாஜக தலைவர் ஜமால் சித்திக் தெரிவித்தார்.

 

உத்தரபிரதேசத்தில் 60 சதவீத முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்ட 50 இடங்களை அடையாளம் கண்டுள்ளது பாஜக. அந்த தொகுதிகளில் சிறுபன்மையினருக்கே சீட் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜமால் சித்திக் கூறினார். "எங்களை ஆதரிப்பது எங்கள் சமூகத்தின் பொறுப்பாகும். கட்சியிலிருந்து அதிக பிரதிநிதித்துவத்தை பெற நாங்கள் விரும்புவோம். ஆனால் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது எங்கள் சமூகத்தின் பொறுப்பு’’ என்றும் அவர் தெரிவித்தார்.  கடந்த சட்டசபை தேர்தலில், உத்தரபிரதேசத்தில் எந்த முஸ்லிம் வேட்பாளருக்கும் பாஜக சீட் கொடுக்கவில்லை.
 

click me!