30 வயசு ஆச்சு.! இன்னும் திருமணம் ஆகாததால் பாதயாத்திரை செல்லும் ஆண்கள் - வினோத சம்பவம் !!

By Raghupati R  |  First Published Feb 11, 2023, 7:32 PM IST

30 வயதை கடந்தும் திருமணம் ஆகாத ஆண்கள், பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை செல்ல உள்ளனர்.


கர்நாடகாவில் 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாத ஆண்கள், பெண் கிடைக்க வேண்டி மாண்டியாவில் இருந்து சாம்ராஜ்நகரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு 105 கி.மீ தூரம் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

வரும் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கும் இந்த யாத்திரைக்கு, ‘பிரம்மசாரிகள் யாத்திரை’ என பெயர் வைத்துள்ளனர். இதில் 200 பேர் பங்கேற்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த யாத்திரை மூன்று நாட்களில் 105 கி.மீ தூரத்தை கடக்கும் என்றும், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்

மாண்டியாவில் உள்ள மணப்பெண்கள் பற்றாக்குறைக்கு பெண்கள் அதிகளவில் விவசாயத் துறைகளைச் சேர்ந்த ஆண்களை விரும்புவதில்லை என்றும்,  திருமணமான பிறகு கிராமங்களுக்குச் செல்ல விரும்பாததுதான் காரணம் என்றும் நம்புகிறார்கள்.

இதனால் தான் இந்த யாத்திரை நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பாத யாத்திரை செல்லும் இந்த குழுவில், யார் வேண்டுமானாலும் இலவசமாக முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

இதையும் படிங்க..திமுக அறக்கட்டளை நிதியை வச்சு பேனா சின்னத்தை எங்க வேணாலும் வைங்க.!! திமுகவுக்கு விஜயபிரபாகரன் கொடுத்த அட்வைஸ்

click me!