
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இம்மாதம் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் இரண்டாம் தேதி அறிவிக்கப்படுகிறது.
திரிபுராவுக்கு வரும் 16ஆம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களுக்கு வரும் 27ஆம் தேதியும்சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் தலா 60 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் இரண்டாம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் திரிபுராவில் இன்று பிரதமர் மோடி இரண்டு பிரச்சார பேரணியில் கலந்து கொள்கிறார். அம்பாசா, கோமதி ஆகிய இரண்டு இடங்களில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்கிறார்.
Delhi-Mumbai Expressway: 246 கிமீ தூர டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை நாளை திறப்பு!
முதலில் அம்பாசாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், ''பாஜகவின் இரட்டை இஞ்சின் ஆட்சிதான் வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கொண்டு வந்தது. மாநிலத்தை வன்முறை, மிரட்டல், பயம் ஆகியவற்றில் இருந்து திரிபுரா மாநிலத்தை பாஜகதான் காப்பாற்றி இருக்கிறது (கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து திரிபுரா ஆட்சியை பாஜக கைப்பற்றி இருப்பதை மறைமுகமாக குறிப்பிட்டார்).
பல ஆண்டுகளாக திரிபுராவில் வளர்ச்சிக்கு இடையூறாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இருந்து வந்தன. பாஜக தான் வளர்ச்சியை கொண்டு வந்தது. வன்முறையை ஒழித்தது. நெடுஞ்சாலை, ரயில்வே, இன்டர்நெட், விமான நிலையங்களை என்று அனைத்துவிதமான வளர்ச்சிகளையும் பாஜக திரிபுராவில் கொண்டு வந்துள்ளது.
மொழி மீது கொண்ட ஈர்ப்பால் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு தம்பதி