அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆசிப் என்பவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆரிப் என்ற சாப்ட்வேர் எஞ்சினியர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள தனிசந்திரா பகுதியில் தங்கி வீட்டில் இருந்தபடியே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். இவருக்கு அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆரிப் வரும் மார்ச் மாதம் ஈராக் வழியாக சிரியாவுக்குச் செல்லும் திட்டத்துடன் இருந்தார் என்று தெரிகிறது. மேலும், இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
Delhi Liquor Policy Scam: டெல்லி மதுக் கொள்கை ஊழலில் ஆந்திர எம்பி மகன் ராகவா கைது
உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தனிசந்திரா காவல்துறையினருடன் சென்று ஆரிப்பை கைது செய்தனர். அவர் டெலிகிராம் மற்றும் டார்க் நெட் மூலம் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார் எனவும் போலி ட்விட்டர் கணக்கு மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ட்விட்டரில் அவர் பயன்படுத்திய போலி கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது.
ஆரிப் தனது மனைவி மற்றும் குழந்தைகளை உத்தரப் பிரதேசத்தில் விட்டுவிட்டு, திங்கட்கிழமை பெங்களூருவில் தங்கிய வீட்டைக் காலி செய்துவிட்டு புறப்பட இருந்தார் எனவும் விசாரணை மூலம் தெரிந்துள்ளது. வீட்டில் அவர் பயன்படுத்திய லேப்டாப் மற்றும் இரண்டு ஹார்ட் டிஸ்க்குகளை காவல்துறை கைப்பற்றியுள்ளது.
Delhi-Mumbai Expressway: 246 கிமீ தூர டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை நாளை திறப்பு!