ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினர் மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவா கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பியின் மகன் மகுண்டா ராகவா கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் தனியாருக்கு மதுக்கடைகள் உரிமம் வழங்குவதற்காக மதுபானக் கொள்கை தளர்த்தப்பட்டது என்றும் இதன் மூலம் மதுபான உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த வழக்கில் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் மகுண்டா ராகவா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அவர் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Nirmala Sitharaman: ‘டெட்டால் போட்டு வாயை கழுவுங்க’ – மக்களவையில் நிர்மலா சீதாராமன் காட்டம்
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலரிடம் அமலாகத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். ராகவா உள்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் மட்டும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த வாரம் பஞ்சாப் சிரோமணி அகாலி தளம் கட்சி எம்பி தீப் மல்ஹோத்ராவின் மகன் கௌதம் மல்ஹோத்ரா, தனியார் விளம்பர நிறுவன அதிபர் இயக்குநர் ஜோஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அமலாக்கத்துறை கடந்த ஆண்டு இந்த வழக்கின் இரண்டாவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கே. கவிதா பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
75 அரசு பள்ளியை சேர்ந்த 750 மாணவர்களால் உருவாக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் !!