அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் பேச்சு பிரதமர் மோடிக்கு எதிரானது மட்டுமல்ல இந்திய ஜனநாயத்தின் மீதான தாக்குதல் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் பேச்சு பிரதமர் மோடிக்கு எதிரானது மட்டுமல்ல இந்திய ஜனநாயத்தின் மீதான தாக்குதல் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லு, மோசடிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அம்பலப்படுத்தி அறிக்கையாக வெளியிட்டது. இதை அதானி குழுமம் மறுத்தது. இருப்பினும் அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு இந்த அறிக்கைக்குப்பின் மோசமாகச் சரிந்தது, ஏறக்குறைய அதானி குழுமத்துக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
Opinion: தீ்ர்ப்புகளும்-ஆளுநர் பதவிகளும்-ஓர் பார்வை
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப்பின் உலக நாடுகள் அதானி குழுமத்தை உற்று கவனிக்கத் தொடங்கியுள்ளன. பல கடன்தர மதிப்பீட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தின் பங்குகள் மீது அடமானக் கடன் தர மறுத்துவிட்டன. பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு இயல்புநிலைக்கு திரும்பவில்லை.
அதானி குழுமத்தின் மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் காரியக் கமிட்டியில் சோனியா, ராகுல் காந்திக்கு நிரந்தர இடம்?
இந்நிலையில் முனிச் நகரில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கோடீஸ்வரர், சர்வதேச முதலீட்டாளர் 92வயதான ஜார்ஜ் சோரஸ் சோரஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமப் பங்குகள் சரிந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்.
பிரதமர் மோடி தொடர்புடைய அதானி குழுமத்துடன் தொடர்பில் இருப்பதால், இந்தியாவில் ஜனநாயகரீதியான மறுமலர்ச்சிக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மவுனமாக இருக்கும் மோடி, அந்நிய முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ் சோரஸ் பேச்சை இந்தியர்கள் ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டும். அவரின் தனிப்பட்ட ஆதாயத்துக்காக இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்.
ப்ராஜெக்ட் சீட்டா: தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகள் நாளை இந்தியா வருகை
ஜார்ஜ் சாரோஸுக்கு வளைந்து செல்லபவர்கள் தெரியவேண்டியது என்னவென்றால், இந்தியா ஏகாதிபத்தியத்தை ஏற்கெனவே தோற்கடித்துள்ளது, அடுத்துவந்தாலும் அதை தோற்கடிக்கும். பாஜகவின் தொண்டர் என்ற முறையில் கூறுகிறேன், இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் இதுபோன்றவர்களை பிரதமர் மோடியின் வலிமையான தலைமையில் எதிர்கொள்வோம்.
முதலீட்டாளர் சோரஸ் தனது தேவைக்கு அரசு வளைந்து செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார். அவரின் பேச்சியில் இருந்து அவருக்கு இணங்கிச் செல்லும் அரசை அவர் விரும்புகிறார் என்பது தெரிகிறது. பிரதமர் மோடி போன்ற பெரிய தலைவர்களை குறிவைக்க 100 கோடி டாலர் உதவியை அறிவித்துள்ளார்.
ஜார்ஜ் சோரஸ் சோரஸ் பேச்சு, இந்திய ஜனநாயகத்தின் செயல்முறையை உடைத்தெறியும் அறைகூவல். நமது உள்விவகாரங்களில் தலையிட முயன்ற அந்நிய சக்திகளை இந்தியர்கள் முன்பு தோற்கடித்துள்ளனர், மீண்டும் அதேபோன்று செய்வார்கள்
இங்கிலாந்து வங்கியையே உடைத்ததன் மூலம் சோரஸ் பொருளாதார போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இவர் இப்போது இந்திய ஜனநாயகத்தை உடைக்க விரும்புகிறார். தவறான நோக்கில்இந்திய ஜனநாயகச் செயல்முறையில் தலையிடுகிறார்.
கேள்வியும் கேட்கல! வர்றதும் இல்லை! எம்பி-யானபின் மவுனமாகிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
தங்களுக்கு இணக்கமா நபர்களை வைத்துக்கொண்டு பல நாடுகளில் ஆட்சியை இதுபோன்ற நபர்கள் கவிழ்த்துள்ளனர். பிரதமர் மோடி அடிக்கடி ஒன்றைக் கூறி வருகிறார், தான் விமர்சனத்தை ஏற்றுக்கொள்வேன், இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் முயற்சியை தாங்கிக்கொள்ளமாட்டேன். இதுஒருபோர். அந்நியச் சக்திகளுக்கும், மக்களுக்கும் இடையே பிரதமர் மோடிதான் நிற்கிறார்.
ஜார்ஜ் சோரஸ் சோரஸ் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த அரசியல் கட்சியும் இந்திய வாக்காளர்கள் முன் அம்பலப்பட்டுவிடுவார்கள். இந்தியா-அமெரிக்கா உறவுகள் வலுப்பெற்று வருகிறது, உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வருகிறது. இந்தநேரத்தில் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். பிரதமர் மோடி தலைவணங்க மாட்டார் என்பதை அந்நியச் சக்திகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்