Congress: காங்கிரஸ் காரியக் கமிட்டியில் சோனியா, ராகுல் காந்திக்கு நிரந்தர இடம்?

By Pothy Raj  |  First Published Feb 17, 2023, 1:46 PM IST

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நிரந்தர இடம் வழங்கும் வகையில் காங்கிரஸ் கட்சி அதன் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன


காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நிரந்தர இடம் வழங்கும் வகையில் காங்கிரஸ் கட்சி அதன் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டத்திருத்தக் குழுவின் தலைவர் அம்பிகா சோனி தலைமையில் நேற்று டெல்லியில் கூடியது. அப்போது இது தொடர்பாக ஆலோசனையும் நடந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தக் குழுவில் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், அஜெய் மகான், ஜிதேந்திர சிங், அபிஷேக் மனு சிங்வி, மோகன் பிரகாஷ், தீபா தாஸ்முன்ஷி, பரமேஷ்வரா ஆகியோர் உள்ளனர். 

வறுமையின் விளிம்பில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்; ஆனால் ஒரு பக்கம் இயற்கை வளங்கள் கொள்ளை!!

காரியக் கமிட்டியில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நிரந்தர இடம் வழங்குவது குறித்து குழுவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில் “ இந்த திருத்தம் அமலுக்கு வந்தால், 3 பேர் மட்டுமே பலன் அடைவார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பயன் பெறுவார்கள். வரும் 24 முதல் 26ம் தேதிவரை ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டித் தேர்தலை நடத்துவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காரியக்கமிட்டி தேர்தலில் போட்டியிட வேண்டுமா அல்லது தலைவர் மல்லிகார்ஜுன கார்கே-வால் பரிந்துரைக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி கட்சித் தலைவர்களிடையே விவாதப் புள்ளியாக இருக்கிறது.

கட்சியின் சட்டவிதிகளின்படி, செயற்குழுவின் 24 உறுப்பினர்களில் பாதிபேர் தேர்தல் மூலமும், மற்றவர்கள் தலைவரால் பரிந்துரைக்கப்படுவார்கள்,இந்த 12பேர் தேர்தலில் போட்டியிடத் தேவையில்லை.

இந்தியாவில் நல்லது நடந்தால் இப்படித்தான் பேசுவாங்க: இடதுசாரிகள் பற்றி ராஜீவ் சந்திரசேகர் கருத்து

அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளில் 1400 பேர் சேர்ந்து காரியக் கமிட்டியில் 12 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு, காரியக் கமிட்டித் தேர்தல் தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் தேதி மட்டும் அறிவிக்கவில்லை. இன்னும் இருவாரங்களே இருக்கும் நிலையில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

காரியக் கமிட்டித் தேர்தல் நடத்துவதற்கு தாமதம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், சோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை எவ்வாறு காரியக் கமிட்டித் தேர்தலில் கொண்டுவருவது என்பதாகும். அதுமட்டுமல்லாமல் நிரந்தரமாக இடம் ஒதுக்குவது குறித்தும் சட்டத்திருத்தக் குழுதான் முடிவு எடுக்க வேண்டும் என்பதால் தாமதமாகிறது. 

இந்த உள்கட்சித் தேர்தலில் ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி குடும்பத்தினர் விலகினாலும் கட்சிக்குள் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் உயரிய அதிகாரம் கொண்ட காரியக் கமிட்டியில் ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் நிரந்தரமான இடம் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Opinion: தீ்ர்ப்புகளும்-ஆளுநர் பதவிகளும்-ஓர் பார்வை

உள்கட்சித் தேர்தலை காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக நடத்தவில்லை. ராய்ப்பூரில் பிப்ரவரி மாதம் நடக்கும் கூட்டத்தில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.


 

click me!