Project Cheetah: ப்ராஜெக்ட் சீட்டா: தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகள் நாளை இந்தியா வருகை

By Pothy Raj  |  First Published Feb 17, 2023, 11:56 AM IST

ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தின் கீழ் தென் ஆப்பிரி்க்காவில் இருந்து நாளை 7 ஆண் சிவிங்கிப் புலிகள், 5 பெண் சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன என்று மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்


ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தின் கீழ் தென் ஆப்பிரி்க்காவில் இருந்து நாளை 7 ஆண் சிவிங்கிப் புலிகள், 5 பெண் சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன என்று மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்

ஏற்கெனவே கடந்த ஆண்டு சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. இந்நிலையில் 2வது கட்டமாக சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன.

Tap to resize

Latest Videos

இந்தியாவில் நல்லது நடந்தால் இப்படித்தான் பேசுவாங்க: இடதுசாரிகள் பற்றி ராஜீவ் சந்திரசேகர் கருத்து

மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறுகையில் “ இந்திய விமானப் படையின் ஏசி-17 விமானம் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது. அங்கிருந்து 5 பெண் சிவிங்கிப்புலிகள், 7 ஆண் சிவிப்புலிகளை ஏற்றுக்கொண்டு சனிக்கிழமை இந்தியா திரும்பும். இந்த சிவிங்கிப் புலிகளைத் தனிமைப்படுத்த குனோ தேசியப் பூங்காவில் தனியாக கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்

தென் ஆப்பிரிக்காவின் குவாஜுல்-நடால் மாகாணத்தில் உள்ள பின்டா தேசியப் பூங்காவில் இருந்த 3 சிவிங்கிப் புலிகளும், லிம்போபோ மாகாணத்தில் உள்ள ரூய்பெர்க் தேசியப் பூங்காவில் இருந்து 9 சிவிங்கிப் புலிகளும் காட்டெங் நகர விமானநிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை கொண்டுவரப்படும்.

அங்கிருந்து இன்று இரவு புறப்பட்டு, நாளை காலை மத்தியப்பிரதேசம் குனோ தேசியப் பூங்காவுக்கு செல்லும்.

பெங்களூரு ஏரோ இந்தியா 2023ல் கண்ணைக் கவரும் டிஆர்டிஓ தயாரிப்பான டபாஸ் ட்ரோன்!!

ப்ராஜெக்ட் சீட்டாவின் தலைவர் எஸ்பி யாதவ் கூறுகையில் “ தென் ஆப்பிரிக்காவின் காட்டெங் நகரில் இருந்து இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு சனிக்கிழமை காலை குவாலியர் விமானப்படைத் தளத்துக்கு 12 சிவிங்கிப் புலிகளுடன் விமனம் வரும்.

அங்கிருந்து எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் மூலம் சிவிங்கிப்புலிகள் மத்தியப்பிரதேசம் குனோ தேசியப் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படும். இந்த பயணத்தின்போது, வனத்துறையினர், வனவியல் வல்லுநர்கள், கால்நடை மருத்துவர்கள் குழு ஆகியோர் உடன் செல்வார்கள்”எனத் தெரிவித்தார்

ப்ராஜெக்ட் சீட்டா எனும் திட்டத்தை இந்திய வனஉயிர் நிறுவனம் உருவாக்கியது. இந்தியாவில் அழிந்துவிட்ட சிவிங்கிப் புலிகளை மீட்டெடுக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக 12 முதல் 14 சிவிங்கிப்புலிகளை ஆப்பிரி்க்காவின் தென் ஆப்பிரி்க்கா, நமிபியா, உள்ளிட்ட நாடுகளி்ல் இருந்து கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. 

ஏற்கெனவே 8 சிவிங்கிப்புலிகளை பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தனது 72வது பிறந்தநாளின் போது குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டார். இந்த அனைத்து சிவிங்கிப் புலிகளும் தற்போது ஆரோக்கியமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!