Rajeev Chandrasekhar : ராஜ்யசபா எம்.பி-யாக இன்றோடு தனது பதவி காலம் முடிந்த நிலையில், மக்களுக்கு சேவையாற்றியதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் ராஜீவ் சந்திரசேகர் நன்றி உரை
ராஜ்யசபாவில் பாஜக தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் பதவிக்காலம் முடிவடைகிறது. ராஜ்யசபா உறுப்பினராக பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, இன்று வியாழக்கிழமை அவர் சபையில் உணர்ச்சிவாசத்தோடு பேசினார். மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தான் எம்.பி.யாக இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
சபையில், ராஜீவ் சந்திரசேகர், நமது நாடாளுமன்றத்தின் மேல்-சபையில் இந்திய மக்களுக்கு சேவையாற்றுவது எனக்குக் கிடைத்த சிறப்புப் பாக்கியம் மற்றும் கவுரவம் என்று கூறினார். ராஜ்யசபா எம்.பி.யாக அவரது பதவிக்காலம் இன்றோடு முடிவடைகிறது. எனது 18 வருட சேவையில் 8 ஆண்டுகள் எதிர்க்கட்சி எம்.பி.யாக இருந்தேன் என்றார் அவர்.
இந்திய பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாரமன் - என்னென்ன அம்சங்கள்?
பிரதமர் நரேந்திர மோடியின் அரசில் 3 ஆண்டுகள் அமைச்சராக இருந்த அவர், 10 ஆண்டுகள் கருவூல எம்பியாக பணியாற்றியுள்ளார். மேலும் பேசிய ராஜீவ் சந்திரசேகர் "ராஜ்யசபா உறுப்பினராக, நான் 2ஜி ஊழல், NPA, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், நடுநிலைமை, தரவு பாதுகாப்பு போன்றவற்றில் விவாதங்களைத் தொடங்கினேன் என்றார்.
நான் நிச்சயமாக கடினமாக உழைக்க முயற்சித்தேன். எமக்கு முன் வந்த அனைவரும் வகுத்த தரத்திற்கு ஏற்ப எனது பணியும் எனது செயற்பாடும் அமைந்திருக்கும் என நம்புகிறேன் என்றார் அவர். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த தனது பதவிக்காலத்தின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.
It has been my singular privilege and honor to serve the people of India in the upper house of our Parliament.
As my term as an MP in the comes to an end, I reflect on my 18 years of service:
➡️ 8 years as an opposition MP, during which I was witness to the… pic.twitter.com/dAPc6IXVc7
மறைந்த கர்நாடக மூத்த தலைவர் அனந்த் குமாரை நினைவு கூர்ந்ததோடு மட்டுமல்லாமல், அம்மாநில முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவுக்கும் நன்றி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் சந்திரசேகர் நன்றி தெரிவித்துள்ளார். எனது அரசியல் பிரவேசத்தை தேவகவுடா துவக்கி வைத்ததாகவும், தொடர்ந்து எனக்கு ஆதரவளித்ததாகவும் அவர் கூறினார்.
மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளை கைப்பற்றும் திமுக கூட்டணி!