உங்கள் வீட்டில் ஒரே ஒரு மகளா? மாதம் 35,000 வழங்கும் சாவித்திரிபாய் ஜோதிராவ் திட்டம் - முழு விவரம் இதோ!

Ansgar R |  
Published : Feb 08, 2024, 05:52 PM ISTUpdated : Feb 08, 2024, 05:54 PM IST
உங்கள் வீட்டில் ஒரே ஒரு மகளா? மாதம் 35,000 வழங்கும் சாவித்திரிபாய் ஜோதிராவ் திட்டம் - முழு விவரம் இதோ!

சுருக்கம்

Savitribai Jyotirao Scheme : வீட்டில் ஒரே ஒரு மகள் இருந்தால் மத்திய அரசின் சாவித்திரிபாய் ஜோதிராவ் திட்டத்தின் மூலம் பலனடைய முடியும், அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஒரே ஒரு பெண் பிள்ளை இருக்கின்ற வீட்டில் அவருடைய படிப்பிற்கு உதவும் வகையில் மத்திய அரசின் சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் என்கின்ற திட்டம் பல நன்மைகளை வழங்குகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு அந்த பெண்ணுக்கு இச்சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதற்கு எப்படி விண்ணப்பிப்பது? மற்றும் அது குறித்த பிற விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

இந்த திட்டத்தை பொறுத்தவரை வீட்டிலிருந்து குரு மகள் மட்டுமே இதில் பயனடைய முடியும். ஆண் பிள்ளைகளுக்கு இந்த திட்டத்தில் சேர வாய்ப்புகள் இல்லை. அதேபோல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரகுராம் ராஜனை ராஜ்யசபாவுக்கு அனுப்பும் நோக்கத்தில் காங்கிரஸ் - ராகுல் மற்றும் காங்கிரஸை சாடும் பாஜக - ஏன்?

அவருடைய மேல்படிப்பை அந்த பெண் மேற்கொள்ளும் பொழுது மத்திய அரசு அவருக்கான சலுகைகளை வழங்கும். இந்த திட்டத்தில் சேர ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாளை உறுதிமொழி பத்திரமாக பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அந்த உறுதிமொழியானது மாஜிஸ்திரேட் அல்லது தாசில்தார் வகுப்பு அரசு ஊழியர்களால் சான்று அளிக்கப்பட வேண்டும். 

அதேபோல அந்த பெண்ணின் பெயரில் ஆதார், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் சேரும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோக்களுக்கு (Junior Research Fellow) இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதுவே சீனியர் ஆராய்ச்சி ஃபெல்லோவாக இருப்பின் தலா 35 ஆயிரம் வழங்குகிறது மத்திய அரசு. 

மாற்று திறனாளிகளுக்கும் மாதம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுது. இந்த திட்டத்தில் சேர தகுதியுடைய பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது நிறுவனத்தில் PhD, அதுவும் முழு நேரமாக பயில வேண்டும். பகுதி நேரமோ அல்லது தொலைதூர PhD சேர்க்கைக்கு இந்த திட்டம் பொருந்தாது. 

மேலும் அந்த பெண்ணின் வயது 40திற்குள்ளாக இருக்க வேண்டும் எஸ்சி/எஸ் டி/ஓ பி சி மற்றும் PWD வகுப்பினர்களுக்கு 45 வயது வரை தளர்வு அளிக்கப்படும். NACC சான்றிதழ் பெற்ற மத்திய மாநில பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பிஎச்டி செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாரமன் - என்னென்ன அம்சங்கள்?

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!