BJP Slams Congress : இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனை ராஜ்யசபாவுக்கு காங்கிரஸ் அனுப்பலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரகுராம் ராஜனை ராஜ்யசபாவுக்கு அனுப்புவது குறித்த விவாதங்களுக்கு மத்தியில், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸை பாஜக சாடியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனை ராஜ்யசபாவுக்கு காங்கிரஸ் அனுப்பலாம் என்று கூறப்படுகிறது. ரகுராம் ராஜனை ராஜ்யசபாவுக்கு அனுப்புவது குறித்த விவாதங்களுக்கு மத்தியில், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸை சாடும் வகையில் அக்கட்சி பிரித்தாளும் அரசியல் செய்கிறது என்று பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று மாலை வெள்ளை அறிக்கை தாக்கல்!
கர்நாடகாவின் நலனை பலவீனப்படுத்த ரகுராம் ராஜன் - அமித் மாளவியா
பாஜக தலைவர் அமித் மாளவியா வியாழன் அன்று ட்வீட் செய்து காங்கிரஸை கடுமையாக தாக்கினார். 2 செப்டம்பர் 2013 அன்று, ரகுராம் ராஜன் தலைமையிலான மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீட்டை உருவாக்குவதற்கான குழுவின் அறிக்கை, கர்நாடகாவின் பங்கை 4.13% லிருந்து 3.73% ஆகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததாக மாளவியா ட்வீட் செய்தார்.
இந்த பரிந்துரையை நிதி ஆயோக் செய்துள்ளது. இவை அனைத்தும் காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியில் நடந்தது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தற்போது தனது சொந்த அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கிறது.
On 2nd Sept, 2013, Report of the Committee for Evolving a Composite Development Index of States, chaired by Raghuram Rajan, suggested that Karnataka’s share should be reduced from 4.13% to 3.73%, which is what the Finance Commission did. All this happened under the Congress led… pic.twitter.com/erEzCq2wSt
— Amit Malviya (@amitmalviya)இது பயங்கரமான பிரிவினைவாத அரசியலைத் தவிர வேறில்லை. ராகுல் காந்தி ரகுராம் ராஜனை ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்க விரும்புவதாக என்னிடம் கூறப்படுகிறது. அதைச் செய்வதற்கு முன், கர்நாடகத்தின் நலனைக் குழிதோண்டிப் புதைத்த ஒருவரை ஏன் கவுரவிக்க விரும்புகிறார்கள் என்பதை காங்கிரஸ் விளக்குமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி ஓபிசி சாதி சர்ச்சை: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு - உண்மை என்ன?