மக்களவைத் தேர்தல் 2024இல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என இந்தியா டுடே - சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இரண்டு முறை ஆட்சியில் இருந்ததால் பொதுவாகவே பொதுமக்களிடம் ஏற்படும் ஆட்சிக்கு எதிரான மனநிலை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளிட்டவைகள் பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக கை ஓங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் அதனை எதிரொலித்துள்ளன. அதேபோல், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் இருந்த நிலையில், பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் இருந்து விலகி, பாஜக கூட்டணியில் இணைந்து விட்டது. மேற்குவங்கம், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024இல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி, அதாவது இந்தியா கூட்டணியே கைப்பற்றும் என இந்தியா டுடே - சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
தேசத்தின் மனநிலை (The Mood of the Nation poll) எனும் பெயரில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 28ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பானது நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய சுமார் 35,801 பேர் மற்றும் சிவோட்டரின் வழக்கமான தரவுகளிருந்து எடுக்கப்பட்ட 113,081 நேர்காணல்கள் என மொத்தம் 149,092 பேரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாரமன் - என்னென்ன அம்சங்கள்?
தமிழ்நாடு - 39
மக்களவைத் தேர்தல் 2024இல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி - 39, தேசிய ஜனநாயகக் கூட்டணி - 0, மற்றவை - 0 என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்ற முறை தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைபற்றிய நிலையில், இந்த முறை 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணி 47 சதவீதம், தேசிய ஜனநாயகக் கூட்டணி 15 சதவீதம், மற்றவை 38 சதவீத வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலை ஒப்பிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா கூட்டணி வாக்கு சதவிகிதம் 6 சதவீதம் குறைந்துள்ளது. மற்றவையின் வாக்கு சதவிகிதம் 3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாநில வாரியான விவரம் பின்வருமாறு
கர்நாடகா - 28
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 24
இந்தியா கூட்டணி - 4
மற்ற்வை - 0
தெலங்கானா - 17
காங்கிரஸ் - 10
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 03
பாரத் ராஷ்ட்ர சமிதி - 03
ஏ.ஐ.எம்.ஐ.எம். - 01
ஆந்திரா - 25
தெலுங்கு தேசம் - 17
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் - 8
இந்தியா கூட்டணி - 0
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 0
கேரளா - 20
இந்தியா கூட்டணி - 20
தேசிய ஜனநாயக் கூட்டணி - 0
மற்றவை - 0
மகாராஷ்டிரா - 48
இந்தியா கூட்டணி - 26 (காங்கிரஸ் - 12; உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் இணைந்து - 14)
தேசிய ஜனநாயக் கூட்டணி - 22
மற்றவை - 0
டெல்லி - 07
தேசிய ஜனநாயக் கூட்டணி - 07
ஆம் ஆத்மி - 0
காங்கிரஸ் - 0
மற்றவை - 0
மத்தியப்பிரதேசம் - 29
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 27
இந்தியா கூட்டணி - 02
மற்றவை - 0
பிரதமர் மோடி ஓபிசி சாதி சர்ச்சை: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு - உண்மை என்ன?
ராஜஸ்தான் - 25
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 25
இந்தியா கூட்டணி - 0
குஜராத் - 26
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 26
இந்தியா கூட்டணி - 0
மற்றவை - 0
மேற்குவங்கம் - 42
திரிணாமூல் காங்கிரஸ் - 22
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 19
காங்கிரஸ் - 01
மற்றவை - 0
உத்தரப்பிரதேசம் - 80
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 72
இந்தியா கூட்டணி - 08
ஜார்கண்ட் - 14
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 12
இந்தியா கூட்டணி - 02
மற்றவை - 0
பீகார் - 40
தேசிய ஜனநாயக் கூட்டணி - 32
இந்தியா கூட்டணி - 08
ஜம்மு-காஷ்மீர் - 05
இந்தியா கூட்டணி - 03
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 02
இமாச்சலப்பிரதேசம் - 04
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 04
இந்தியா கூட்டணி - 02
மற்றவை - 0
ஹரியாணா - 10
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 08
காங்கிரஸ் - 02
ஐ.என்.எல்.டி - 0
மற்றவை - 0
பஞ்சாப் - 13
பாஜக - 02
ஆம் ஆத்மி - 05
காங்கிரஸ் - 05
சிரோமணி அகாலிதளம் - 01
உத்தரகாண்ட் - 05
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 05
இந்தியா கூட்டணி - 0
மற்றவை - 01
அசாம் - 14
தேசிய ஜனநாயக் கூட்டணி - 12
இந்தியா கூட்டணி - 02
மற்றவை - 0