மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இருமுடிகட்டி சபரிமலையில் சாமி தரிசனம்.. நடந்தே மலையேறினார்.

Published : Aug 18, 2022, 08:55 PM ISTUpdated : Aug 18, 2022, 09:08 PM IST
மத்திய அமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் இருமுடிகட்டி சபரிமலையில் சாமி தரிசனம்.. நடந்தே மலையேறினார்.

சுருக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். அவர் கால்நடையாக சென்று சாமி தரிசனம் செய்ததற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.    

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். அவர் கால்நடையாக சென்று சாமி தரிசனம் செய்ததற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து, இருமுடி கட்டி கால்நடையாக சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.  பல வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் ஐயப்பனுக்கு இருமுடி கட்டி சபரிமலை வந்து தரிசிக்கின்றனர். இதில் பல  விஐபிக்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என எண்ணிலடங்காதவர்கள் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்: நான் இல்ல என் தொண்டன் கூட உங்களை பார்த்து பயப்பட மாட்டான்.. ஸ்டாலினை அசால்ட் செய்த அண்ணாமலை.

இந்த வரிசையில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துள்ளார். ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்த அவர் பெங்களூரு ஐயப்பன் கோவிலில் இருந்து நேற்று மாலை பத்தனம்திட்டாவுக்கு வருகை தந்தார். இன்று காலை பம்பையில் இருந்து பாதயாத்திரையாக  மலையேறி சபரிமலை சன்னிதானம் அடைந்தார், ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மத்திய அமைச்சரும் மலையேறி பதினெட்டு படிகளில் ஏறி சன்னிதானம் அடைந்தார்.

இதையும் படியுங்கள்: பிடிஆர் மீது சேற்றை வாரி இறைக்க முயன்ற எஸ்.ஜி சூர்யா.. ஆதாரத்துடன் பொய்யை அம்பலப்படுத்திய நெட்டீசன்..

பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கால்நடையாகவே மலையிலிருந்து இறங்கினார். இந்த ஆண்டுடன் அவர் 26வது முறையாக சபரிமலைக்கு இருமுடி கட்டு சென்றதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமைச்சரான பிறகு இதுவே முதல் சபரிமலை தரிசனம் என்றும் அதில் கூறியுள்ளார், கடந்த சில  நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த போதும், ஐயப்பனின் ஆசியுடன் தரிசனம் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் மாலையில் கொச்சி வந்த அவர் நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

 

சிம்மகாச பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது, காலை 5 மணிக்கு மூத்த தந்திரி கண்டரரு ராஜீவ்வரர்  தலைமையில் மேல்சாந்தி என். பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடை திறந்து தீபம் ஏற்றினார். அதைத்தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது, கோவில் நடை அடுத்த 5 நாட்களுக்கு திறந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜைகள் முடிந்து 26ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும், இதேபோல்  ஓணம் நாள் பூஜைக்காக செப்டம்பர் 6ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தனது சபரிமலை யாத்திரை குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு யாத்திரையின் போது 1 மணிநேரம் 16 நிமிடங்களில் மலை ஏறியதாகவும், 2017 ஆம் ஆண்டு 1 மணி நேரம் 4 நிமிடங்களில் மலையேறியதாகவும், 2019ஆம் ஆண்டு 1 மணி நேரம் 6 நிமிடங்களில் மலையேறிவிட்டதாகவும் தற்போது 2022ஆம் ஆண்டு 1 மணி நேரம் 30 நிமிடங்களில் மலையேறியதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே அவர் சபரிமலை ஏறிய புகைப் படங்களையும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!