
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மத்திய அமைச்சரும், நரசிங்பூர் பாஜக வேட்பாளருமான பிரஹலாத் படேலின் கார் சாலை விபத்தில் சிக்கியது. சிந்த்வாரா மாவட்டம் அமர்வாரா என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக சிந்த்வாராவில் இருந்து நரசிங்பூருக்கு பயணம் செய்தபோது இந்த விபத்து நடத்துள்ளது. இந்தக் கோர விபத்தில்
"விபத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நாக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்" என சிந்த்வாரா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விபத்துக்குப் பின் பேசியிருக்கும் அமைச்சர் பிரஹலாத் படேல், "இன்றைய சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது. எனது ஓட்டுனர் சாமர்த்தியமாக எங்களைக் காப்பாற்ற முயன்றார். அவருடைய முயற்சியால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். ஆனால் ஒருவர் இறந்த செய்தி மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரது குடும்பத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
தகவல் தெரிந்ததும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார் என்றும் அமைச்சர் படேல் குறிப்பிட்டுள்ளார்.