
சபரிமலையில் நேற்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது.
நேற்று காலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும், வழக்கமான பூஜைகள் நடைபெற்றன . காலை 8 மணிக்கு புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடந்தது.
இதில் சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி , மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
உன்னிகிருஷ்ணன் வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்.
முன்னதாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறந்து தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கினார்.