புதிய ரூ.200 நோட்டு எப்போது ஏ.டி.எம்.களில் கிடைக்கும்?

First Published Oct 17, 2017, 5:00 PM IST
Highlights
The new Rs 200 note will be available at ATMs


ரிசர்வ் வங்கி வௌியிட்ட புதிய ரூ.200 நோட்டு வங்கிகளின் ஏ.டி.எம்.களில் 2018ம் ஆண்டு தொடக்கத்தில்தான் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.

ஏனென்றால் பெரும்பாலான வங்கிகள் புதிய ரூ.200க்கு தேவையான மாற்றங்களைச் செய்ய விருப்பமில்லாமல் இருப்பதால் இந்த தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

இது குறித்து டெல்லி என்.சிஆர். பகுதியில் ஏ.டி.எம்.களை பராமரிக்கும் நிறுவனத்தின் இயக்குநர்நவரோஷ் துஸ்தர் கூறுகையில், “ புதிய ரூ.200 நோட்டுகளுக்கு ஏற்றார்போல் ஏ.டி.எம்.களை மாற்றியமைக்கக் கூறி, வங்கிகள் இதுவரை எங்களிடம் ஒரு வேண்டுகோள் கூடவிடுக்கவில்லை. ஆனால், சில வங்கிகளின் ஏ.டி.எம்.களை மட்டும் நாங்கள் மாற்றி இருக்கிறோம். பெரும்பாலான வங்கிகள் ஏ.டி.எம்.களில் மாற்றம் செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பதால், ரூ.200 நோட்டு கிடைப்பதால் இந்த ஆண்டு இறுதிவரை தாமதமாகும்’’ என்று தெரிவித்தார்.

ரூபாய் நோட்டு தடை காலத்தில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை வைக்க ஏ.டி.எம்.களில் மாற்றம் செய்ய வங்கிகள் ஏராளமாக செலவு செய்துவிட்டனர். இப்போது, ரூ.200 நோட்டுகளுக்கும் செலவு செய்ய வேண்டும் என்று வங்கிகள் கருதுவதால் தாமதம் செய்கின்றன எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கனரா வங்கியின் தலைவர் ராகேஷ் சர்மா கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடை காலத்துக்கு பின், ஏ.டி.எம்.களை மாற்றி அமைக்கும் பணி மிகவும் லேசானது என நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில், ஏ.டி.எம்.களை மாற்றி அமைப்பது மிகவும் மெதுவாகச் செய்யக்கூடிய பணி, அதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்.

ரூபாய் நோட்டு தடை காலத்தில் இந்த பணிக்காக இரவு பகல் பராது, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஏ.டி.எம். பணியாளர்கள் வேலை செய்தனர். இதற்கு 2 வாரங்கள் தேவைப்பட்டது. ஆனால், இப்போது ரூ.200 நோட்டுகளுக்காக ஏ.டி.எம்.களை மாற்றியமைக்கும் அவசரச் சூழல் இல்லை.  இந்த ஆண்டு இறுதிவரை கால அவகாசம் இருக்கிறது’’ என்றார்.

ஆதலால், ஏ.டி.எம்.களில் புதிய ரூ.200 நோட்டுகள் 2018ம் ஆண்டு தொடக்கத்தில்தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

click me!