இந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் ரூ.500க்கு கூவி, கூவி விற்பனை!

First Published Oct 17, 2017, 4:18 PM IST
Highlights
Indian credit and debit card details are available for Rs 50


இந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளின் விவரங்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் உள்ளிட்டவைகளை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கும்பல் ரூ. 500க்கு விற்பனை செய்துள்ளதாக மத்தியப் பிரதேச போலீசார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தூரைச் சேர்ந்த ஜெயகிஷான் குப்தா என்ற வங்கி அதிகாரி, தன்னுடைய கிரெடிட் கார்டை யாரை ஒருவர் தனக்கு தெரியாமல் பயன்படுத்தி, ரூ. 72 ஆயிரத்து 401க்கு பொருட்கள் வாங்கியுள்ளார். என்று கடந்த ஆகஸ்ட் 28-ந்தேதி சைபர் போலீசில் புகார் செய்து இருந்தார்.

இதையடுத்து, இந்தூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அது குறித்து சைபர் செல் போலீஸ் எஸ்.பி. ஜிதேந்திர சிங் கூறியதாவது-

நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, மும்பையைச் சேர்ந்த ராஜ்குமார் பிள்ளை, ராம்பிரசாத் நாடார் ஆகிய இருவரும் ஜெயகிஷான் கிரெட்டி கார்டு மூலம் விமான டிக்கெட்டுகள்வாங்கி இருப்பதைக் கண்டுபிடித்தோம். இதில் ராஜ் குமார் வங்கியிலும், ராம் பிரசாத் ஐ.டி. நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.

இந்த இருவரும் பிட்காயின் மாற்றும் நிறுவனம் நடத்தி வந்த ஒரு பெண்ணிடம் கிரிடெட் கார்டுவிவரங்களை பெற்றதாக தெரிவித்தனர். இதையடுத்து, வாடிக்கையாளர் போல் சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து டெபிட், கிரெட்டி கார்டு விவரங்களை பெற்றுபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து செயல்படும் சர்வதேச கும்பல் ஒன்று இந்தியர்கள் வங்கிக்கணக்கு, டெபிட், கிரெட் கார்டு, வங்கிக்கணக்கு விவரங்கள், சி.வி.வி. எண், இமெயில் முகவரி ஆகியவற்றை ரூ.500 க்கு விற்பனை செய்துள்ளனர். இதைப் பெற்று, இந்த பெண் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்த விவரங்களை அளித்துள்ளனர். இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளோம்.

இந்த கிரெட்டி, டெபிட் கார்டுகளை ஓ.டி.பி. எண் தேவைப்படாத சர்வதேச இணையதளத்தின் உதவி மூலம் பயன்படுத்தி பணம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!